பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20



பொருள் விளைப்பது தீவக அணி என்பார்கள். (தீபகம்=விளக்கு)

இப்பாடலில் கடைநிலைத் (தொழில்) தீவகம் அமைந்துள்ள அணியழகும் சுவைக்கத் தக்கதாகும்

'வழங்கினேன்’ எனுஞ் சொல் பாடலின் பல இடங்களிற் சென்று பொருந்தி அழகியது வழங்கினேன். அல்லாஹ்வுக்காவே வழங்கினேன். விழைவுடன் வழங்கினேன், கொடுத்திட வேண்டுமென்று வழங்கினேன். பழமறை வாக்கினால் வழங்கினேன், நீர் பகர்ந்ததால் வழங்கினேன் எனப் பொருள் முடிவு செய்கிறது.

மேலும் தமிழுக்கேயுரிய சிறப்பு 'ழ' கரம் ஆறு முறை இப்பாடலில் அமைந்து ஓசைக்கு மெருகேற்றுகிறது. அழகு, விழைவு, பழம் முதலிய மங்கலச் சொற்களும் கவிதையைச் சிறக்கச் செய்கின்றன.

சீறாப்புராணத்தைப் பயில்வோர் காயலில் பிறந்து கீழக்கரையில் வாழ்ந்த தத்துவ ஞானி செய்கு சதக்கத்துல்லா அப்பா அவர்களையும், கீழக்கரை தந்த செம்மல் சீதக்காதி அவர்களையும், அவர்களுக்குப் பின்னர்ப் புலவரைப் புரந்த வள்ளல் பறங்கிப்பேட்டை அபுல்காசீம் மரைக்காயர் அவர் களையும் மறந்து விடலாகாது சீமான் சீதக்காதியால் ஆதரிக்கப்பட்ட புலவர் மிகப் பலராவர். சீதக்காதியின் பேரில் 'நொண்டி நாடகம்' பாடிய புலவர், வள்ளலின் அவையில் உமறுப் புலவரோடு கந்தசாமிப் புலவரும் வீற்றி ருந்ததாகக் குறிப்பிடுகிறார்.

சந்தமும் தமிழ்த்தேறுங்-கல்வித் தலைவர் மகிழ் உமறுப்புலவருடன் செந்தமிழ்க் கந்தசாமிப்-புலவனும் சீராட்டெனத் தமிழ் பாராட்டவே."

என்பது பாட்டு. உமறுவைக் "கல்வித் தலைவர் மகிழ் உமறு" என்று புகழ்துரைப்பது நோக்கத்தக்கது. உமறுப் புலவர் தம் ஆசானாகிய கடிகை முத்துப் புலவர் வழியொழு