பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

255


பிலம்பட் டுறைந்த நறுஞ்சலிலம்
   பிறந்து குமிழி யெழுந்தனவே [1]

என்கிறார் உமறுப் புலவர்.

ஜிபுரயீல் ஒலூ வகை, தொகை, தொழுகை முறைமைகளைக் காட்டி விண்னேறி சுவர்க்கப்பதி சென்றதனை,

"பெருகிப் பரந்த புனற்கரையிற்
    பெரியோன் தூதை யருகிருத்தி
மருவு மலரு மெனவுலுவின்
    வகையுந் தொகையும் வரவிருத்திக்
குரிகி னபியைப் பின்னிறுத்திக்
    குறித்த நிலைரண் டிறக்க அத்துப்
பரிவிற் றொழுவித் திருந்துவிண்ணிற்
    படர்ந்து சுவனத் தவத்துறைந்தார்."[2]

எனப் பாடுகிறார்.

முறைசீக்குப் படலத்தில் பயகாம்பருக்கு ஒலுச் செய்வதற்கு 'தயமம்' செய்து தொழ மேலவன் விதித்துள்ள மொழியினை (39) மஞ்சார் வெளி வழியே கொடு வந்த ஜிபுரயீலினைக் காட்டுகிறார் உமறுப்புலவர்.

இங்ங்னமாக புலவரேறு உமறுப்புலவர் தமது காப்பியத்தில் ஜிபுரயீல் (அலை) அவர்களை-இயற்கை கடந்த பாத்திரத்தினை சிறப்புற படைத்துக் காட்டியுள்ளார்.

உமறு உருவகிக்கும் இபுலீசு

யார்? எது? இபுலீசு!

இபுலீசு, ஷைத்தான், சாத்தான் (Satan) யாவும் ஒரே பொருள் விளக்குவன. 'ஷாத்தான்' எனும் அரபு மொழி சொல்லிற்கு 'ஷதன்’ எனும் வேர்ச் சொல் அடிப்படையில்


  1. 1.சீறா தொழுகை வந்த வரலாற்றுப் படலம் 37, 39
  2. 2.சீறா தொழுகை வந்த வரலாற்றுப் படலம் 37, 39