பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

259


யுமுனைப்போன்' (உகுது. 225); 'சதி மனத்திபுலிசு’ (அபீறாகு, வதை 3); "சிறியன் வஞ்சகச் செய்கைய ணியா வர்க்குந் தீயோ னிறைவனேவலைத் தவிர்த்திடுங் கசட்டி புலீசு" (யாத், 36) என்பன சில,

உமறுப்புலவர் இலட்சிய இபுலிசை இன் தமிழில் 'பொய் எனும் படைபலத்தின் தலைவன்; சிறுமை, தாழ்மை, இவற்றில் பெருமையுடையவன்; கொலைத் தொழிலின் தந்தை; கோளுக்கு உயிர்த் துணைவன்; களவுக்கு அன்பன்: நிந்தனைக்குப் பொருந்திய தம்பி; மதுவுக்கு மகவினும் இனியன்; நீட்சியுற்ற இஞ்ஞாலத்து மாயங்களனைத்தினாலும் ஒரு வடிவத்தினை எடுத்து நின்றவன்; என்றுமிருக்கும் இறை அல்லாஹ்வின் ஏவற்றொழிலிருந்து மாறுபட்டு சுவர்க் கப்பதியினை இழந்து சத்தியத்தை விதிக்காநிற்கும் மறைகளுக்கும் நாணமுற்று இந்தப் பூவுலகத்தின் கண் வாழும் யாவருக்கும் கொடிய தன்மையுடைய 'இபுலீசு' என்று கூறும் பெயரையுடையவன் என்பதனை,

"அலைகடற் றிரைக்கு நாப்ப னாளியா சனத்தில்வைசி
உலகெலாங் கொடுங்கோலோச்சி யொருகுடை நிழலிற் றாமங்கிப்
பலகலை மருவலார்க்குப் படிறெனும் படைந டாத்துத்
தலைமையன் சிறுமை கீழ்மை தனைப்பெரு யைமதாய்க் கொண்டோன்."[1]

"கொலையினுக் குரிய தந்தை கோளுயிர்த் துணைவன் மாறா
நிலைகெடுங் கரவுக் கன்ப னிந்தனைக் குற்ற தம்பி
யிலைபிழி மதுவுக் கீன்ற சேயினு மினிய னீண்ட
உலகினின் மாயமெல்லா மோருரு வெடுத்து நின்றோன்.” [2]

  1. 1.சீறா, ஜின்கள் ஈமான் கொண்ட படலம் 4, 5,
  2. 2.சீறா, ஜின்கள் ஈமான் கொண்ட படலம் 4, 5,