பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

261


என்று அரசாட்சி செலுத்தி வீற்றிருந்தோன். குறைவில்லாத பெரும் படைகளை உடையோன். இழிவு ஈனங்கள் முழுமையுந் தன்னை விட்டும் ஒழிந்து போகாது மாயைகள் விளைவிக்கும் இயல்புயை இபுலீசு எனும் பெயரையுடையோன்,) என்கிறார்.

யாத்திரைப் படலத்தில்

நபிகள் நாயகம் குறித்து பலவாறாக உண்மைக்கு மாறாக தவறாக எடுத்துக் கூறி, மக்க மாநகர் மக்களை எச்சரிக்கை கூறுவதாக யாத்திரைப் படலத்தில் அறிமுகம் படுத்தப்படுகிறான்.

பின் உக்குபா, உத்துபா, உமைய்யா, ஒலிது, சைப, அபூஜஹல் இவர்களின் நண்பர்கள் போன்றவர்கள்அறத்தின் எதிரிகள் -இஸ்லாத்தின் எதிரிகள் யாவரும் ஒழுங்கு திரண்டு மந்திாாலோசனை சபைக்குச் செல்ல வேண்டுமெனக் கூறி, இபுலீசும் பொறுமையுள்ளவன் போன்றும், வணக்கம், அறிவு, புகழில் மிக்கவன் போன்றும், அறபி குலத்தினன், தோற்றத்தில்-வயதில் முதிர்ந்தவன் போன்றும், பிரியாத உறவினுக்கு, உற்ற துணை போன்றும் அவையினுட் புகுந்தான். 'நரைத்த பெரிய வயதினையுடை யவன் போல அங்கு செல்ல, கண்டவர் அனைவரும் பெரியார் மதிப்புமிக்கார் இவரென 'வாருங்கள்! அமருங்கள்!" என உரைத்தனர். மனமகிழ்ந்தனன். அறிவாளிகளிடம் நோக்கிக் சென்று இருந்தான்'" (37, 38) மந்திராலோசனையில் ஒவ்வொருவரும் நபி பெருமானாரை ஒழிப்பதற்குத் திட்டங்கள் ஒவ்வொன்று கூற, இபுலீசு அவ் ஒவ்வொரு வழிக்கும் அவற்றிலிருந்து பெருமானார் மீள்வர் என விளக்குவதாகக் காட்டப்படுகிறது திருமணத்திற்கு புறப்படுப செய்தியினை அபூஜஹலுக்கு தூது சொன்னவனும் இபுலீசே எனக் கூறப்படுகிறது.

இபுலீசு பெற்ற இழிநிலையினை யாத்திரைப் படலத்தின் இறுதியிலே காணலாம். பெருமானார் வீசிய மண் இபுலீ