பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

262


சின் வாய், முகத்திலும் எங்கும் நிரம்பக் கண்டான். கண் விழித்த இபுலீசு அவனைத் துடைத்து பின், தூங்கிக் கிடந்த அனைவரையும் எழுப்பினான். அவர்கள் அனைவருக்கும் இக்கதியே, இபுலீசு அவர்களிடம் நானொருத்தன் தவிர மற்றவர்களின் வாய்களில் மண் என பொய் கூறி நின்ற செய்தியினையும் காட்டுகிறார்.

இபுலீசுநிலை-அவன் சுற்றம்-உமறுப் புலவரின் உருவகச் சித்திரம்

அன்னை ஆமினா கருவுற்றார்கள். இக்கருவினைச்சத்தியமாகவும்-சன்மார்க்கமாகவும் உமறுப் புலவர் காண்கின்றார். சத்தியம்-அறம்-சன்மார்க்கம் தோன்றப் போகின்றன என அசத்தியமும் மறமும் துன்மார்க்கமும் துயருறுகின்றன என சித்தரிக்கிறார் கவியேறு.

அசத்தியத்தின் - மறத்தின் - துன்மார்க்கத்தின் மொத்த உருவமாக-அதர்மத்தினை இபுலீசாகக் கண்டுஅவன் படும் துன்பத்தினை சொற் சித்திரத்தால் வரைகிறார்.

இபுலீசு நடுங்கி வாயில் உமிழ்நீர் உலர்ந்திட, நாவு உலர்ந்து, உடல் நடுங்கி, ஐம்பொறிகளும் மயக்குறுகிறான். நெஞ்ச முழுமையும் உடைந்து, நெருப்புப் புடத்தில் உருகும் ஈயம போல நினைப்புருகி அடிக்கடி பெருமூச்சு விட்டு, சுழன்று, புலம்பிக் கரைகிறான், ஏங்குகிறான், மலங்குகிறான், கலங்குகிறான். கதறிச் சப்தமிடுகிறான். கன்னத்திற் கையை வைத்திருந்து எழுந்திருக்கிறான். மறுபடியும் பூமியின் மேல் விழுந்து எனக்கினிச் சிங்காதனம் இவ்விடத்தில் இல்லை என்று அறிவு மறந்து இரண்டு கண்களிலும் தாரை தாரையாக நீரொழுகக் கிடக்கிறான். இவ்விதமாக அறிவழிந்து நிலைபேறு கெட்டுக் கிடக்கும் இபுலீசிடத்தில் அவன் மக்கள்-சந்த்திகள் அனைவரும் வந்து சேர்ந்தனர். தம் மக்களிடம் இபுலீசி அறம் தோன்றியது பற்றி உணர்ந்தான். அறிந்து அறிவு தடு