பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

கிப் புலமைத் திறமெல்லாம் பெற்றார் என்னும் செய்தியைப் பாவலர் சோமசுந்தரமணியக்காரர்,

"காவிகமெல்லாம் கற்றனர், கடிகை
யாரெனும் கவிகளுக்கரசன்
மேவிய புலமை யாவையு மிவருள்
மேவிட மாற்றுதலனார்;
ஒவிய மொத்தே யவரருகிருந்தே
யுமறதை யிட் கொளலானார்:
நாவியல் பாக்களெதனையு நவிலு
நற்றிற மடைந்தன. ரம்மா",

நாவியல் பாக்களெதனையும் நவிலும் நற்றிறம் பெற்றவர் என்று நயம்பட வருணித்திருப்பது நினைந்து மகிழத்தக்கது, புலவர்கள் மத்தியில் உமறுவுக்கு இருந்த பெருமதிப்பினை இப்பாக்கள் இதமாய் இயம்புகின்றன. அருமையாய் அழைக்கப் soபெறும் உமறப்பாவிற்கு "இஸ்லாமிய மகாகவி" என்ற சிந்தைக்கினிய சிறப்புப் பட்டம் முற்றிலும் பொருத்தும் சீவக சிந்தா மணி, கம்பராமாயனம் ஆகிய நூல்களின் விருத்த யாப்பிலேயே சீறாப்புராணத்தின் வடிவமும் (form) அமைந்துள்ளது. புலவரேறை 'இஸ்லாமியக் கம்பன்' எனலாம். ஆனால் புலவரின் தன்னடக்கத்தைப் பார்ப்போம். காப்பியங்களைத் துவக்கும் முன்னர் புலவர்கள் அவையடக்க மாகத் தங்களைப் பற்றி ஒருசில கூறிக் கொள்வது மரபு. செந்தமிழ்ப் புலவர்கள் முன் தாம் கவி பாடுவது புயல் காற்றுக்கெதிராக எறும்பு மூச்சு விடுவது போன்றது எனவும், இடியோசைக்கெதிரே கையால் நொடியோசை செய்வது போன்றது எனவும் உமறு இசைத்திருப்பது இன்பம் பயப்பதாகும்.

சீறாப்புராணம் சுவையூறும் இறவாத் தெய்வ மணம் கமழும் காப்பியம், கவிதைக் களஞ்சியம், அளவற்ற பொருள் வகைகள் நிறைந்த அருமையான பொற்குவியல். சொற் சந்தமும், பொருட்செறிவும் அணியழகும், உவமை நயமும், தத்துவ எழிலும் ஒருங்கே மிளிரும் இலச்சியச் சுரங்கம்; கற்பனையூற்றுப் பெருகிப் பாய்ந்தோடும்