பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

268


நிர்ப்பந்தம் அவனுக்கு ஏற்படுகின்றது. இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மொழிச் சொற்களை அறிந்த ஒருவன் தனது கருத்துக்களை உரையாடல் மூலமோ எழுத்து மூலமோ வெளியிடுவதற்கு இரண்டு மொழிகளிலுமிருந்து சொற்களை உபயோகிப்பதற்கு தயங்குவதில்லை. அவ்வாறு சர்வ சாதாரணமாகவே உபயோகின்றான்.

உலக முஸ்லிம்சள் இஸ்லாத்சையும் அதன் மொழியான அறபையும் முன்னோர் சொத்தாகப் பெற்றுள்ளனர். ஒரு முஸ்லிம் எங்கு வாழ்ந்தாலும் இஸ்லாமியப் பதங்களையும் சொற்றொடர்களையும் அறிந்தவனாக இருத்தல் வேண்டும். தனது அன்றாட வாழ்க்கையில் இஸ்லாமிய மத அனுட் டானங்களைக் கடைப்பிடிப்பதற்கு அவை அவசியமாகின்றன. அவற்றைத் தமிழ் போன்ற ஒரு மொழியில் பெயர்த்தல் கடினமாகின்றது. அவற்றை அவ்வுச்சரிப்புடன் தமிழ் எழுத்துக்களில் எழுதினால் கூட அவை அவற் றிற்கே உரிய உச்சரிப்பைத் தரத் தவறி விடுகின்றன. இதனாலேயே இஸ்லாத்தின் செல்வாக்கின் கீழ் வந்த மக்கள் அவரவர் மொழிகளில் ஏராளமான அரபுச் சொற்களைப் புகுத்துவது பொருத்தமானதே எனக் கண்டனர், புகுத்தியும் விட்டனர். இவ்வாறு புகுத்தப்பட்டதன் விளைவினை இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய காப்பியங்கள் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன,

கலப்பற்ற மொழி இல்லை என்றே கூறலாம். பல்வேறு மொழிச் சொற்களைக் கொண்ட மொழியாக ஆங்கில மொழி வருணிக்கப்படுகின்றது. உலக பொதுத் தன்மையைப் பெற்ற மொழியாகக் கருதப்படுகின்றது. உலகத்தில் உள்ள ஒவ்வொரு நாடும் அவற்றின் சொல் மயமான உற்பததிகளை ஆங்கில மொழி எனனும் அறிவுச் சந்தைக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தகதாகும். ஆனால் இதற்கு நேர்மாறாக அறபு மொழி என்னும் அறிவுச் சந்தையிலிருந்து சொல் மயமான உற்பத்திகளை முஸ்லிம்கள் வாழும் ஒவ்வொரு நாடும் பெற்றிருக்கின்றது என்றும் மொழியின்