பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

274


கருத்துக்களை விளக்கி ஈமான் என்னும் அறபுச் சொல் ஆளப்பட்டுள்ளதை இப்பாடலில் காணலாம்.

"ஒருத்தனா யகனவற் குரிய தூதெனு
மருத்தமே யுரைகலி மாவந் நிண்ணயப்
பொருத்தமீ மானடை புனை த லாமமல்
திருத்தமே விவையின் லாமிற் சேர்தலே"[1]

இப்பாடலில் ஈமான் என்ற சொல்லோடு கலிமா, அமல், இஸ்லாம் என்னும் அறபுச் சொற்களும் உபயோகப்பட்டுள்ளன அவற்றை ஒவ்வொன்றாகப் பின்னர் பார்ப்போம். அண்ணல் நபி (சல்) அவர்கள் 'இப் பூவுலகத்திலே தாங்கள் போதிக்கும் நன்னெறியில் ஈமான் (விசுவாசம்) கொள்ளாதவர்களை அதாபு என்று வருணிக்கப்படும் 'கொடிய நோய் பிடிக்கும்' என்று இஸ்லாமிய போதனைகள் ஆரம்பமான காலத்தில் மொழிந்தார்கள். இதனையே உமறுப்புலவர்,

"தரைத்தலத் தீமான் கொள்ளுதற் கிசையாத்
    தரம்படைத் தவரனை வரையுங்
கரைத்திட நனிய தாபெனுங் கொடிய
    கடும்பிணி பிடித்திடு மென்றார்" [2]

என வருணிக்கிறார். உமறுகத்தாப் ஈமான் கொண்ட படலத்தில் உமறுகத்தாப் (றலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டமைப் பற்றிப் பல இடங்களில் ஈமான் என்னும் அறபுச் சொல்லை 'மென்னபிக் கீறான் கொண்டோர் (66) எனவும், 'அரிய மறைதேர்ந் தீமான் கொண்டு' (90) என வும், கூறுங் கலிமா வுரைத் தீமான் கொள்ளும் படிக்கிங் கடைந்தனென்’ (91) எனவும், 'மனங்களிப்புக் கொண்ட ரீமான் கொண்டாரே' (98) உபயோகிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். 'வினவி பீமான் கொண்டவர்கள்' (உத்துபா)

  1. 1. சீறா. தொழுகை வந்த வரலாற்றுப் படலம் 2
  2. 2. சீறா. தீனிலை கண்ட படலம் 115