பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

275


படலம் 3) புதிய மொழி யுரைத் தீமன் கொள்வித்தீர்' (உத்துபா வந்த படலம் 4) 'இவர் தமக் கீமான் கொண்டது' (மதியை அழைப்பித்த படலம் 175) 'எத்தலமும் 'ஈமானினை யுளத்தினி விருத்தி' (மதியை அழைப்பித்த படலம் 179), 'எத் லமும் புகழ்ந்தேத்த வீமான் கொண்டு (புத்து பேசிய படலம் 12) , எனப் பல இடங்களில் ஈமான் என்னும் அறபுச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சந்தர்ப்பத்தில் மதங் கொண்ட யானைக்கு அழகிய ஈமான் 'செவ்வி பீ மானெனு மதகரி' (மதியை அழைப்பித்த படலம் 56) என உருவகிக்கப்பட்டுள்ளது. மானுக்குப் பிணை நின்ற படலத்திலும் ஈமான் என்னும் அறபுச் சொல் அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளமை நோக்கற்பாலது. வண்டுகள் மலர்களிலுள்ள தேனை அருந்திப் பாடுகின்றன. அந்தப் பாட்டில் வேடன் ஈமான் கொள்ள விரும்பியுள்ளான் என்ற கருத்துத் தொனிப்பதாக உமறுப்புலவர்,

"ஏட்டலர் நறல மாந்தி யிருஞ்சுரும் பிசைக்குந் தோற்றம்
.......................வருந்து மானை
மீட்டனர் வேட னிமான் விரும்பினன்... (51)."

எனப் பாடியுள்ளார். மான் கன்றின் கூற்றாக பாதபங்கயத்தைக் கண்டு பரிவுட னிமா கொண்டு (6 ) எனவும் பாடப்பட்டுள்ளது. அண்ணல் நபி (சல்) அவர்கள் நலமாச் சொல்லி கொடுக்க அந்த வேடனும் ஈமான் கொண்டான் என்பதை 'முகம்மது கலிமா' சொல்ல லிதயமுற் றோதி வேட னினிதினி னிமான் கொண்டு புதியனை வணங்கி.(63) என வருணித்துள்ளார் ஆசிரியர். மற்றொரு செய்யுளில் உமறுப்புலவர் மான் என்னும் சொல்லையும் ஈமான் என்னும் அறபுச் சொல்லையும் ஓசை நயம் ததும்ப அமைத்துப் பாடுவதோடு, இல்லாத மானைக் கொண்டு வரப்போய் ஈ இடைய மானான ஈமானைக் கொண்டு தனது வீட்டுக்குச் சென்றான் என்பதை,