பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

276


"மானைக்கொண் டுவரப் போயீ மானைக்கொண்
டகத்திற் புக்கான்." (71)

என்று சிலேடை அமைத்துப் பாடியிருப்பது போல் தோன்றப் பாடியிருப்பது நயக்கத் தக்கது. பின்வரும் பாடல்களிலும் ஈமான் என்னும் அறபுச் சொல் ஆளப்பட்டுள்ளமையைக் காணலாம். ஜின்கள் ஈமான் கொண்ட படலம்: 11, 14, 21, 27, 33, 39, 41 மதீனத்தார் ஈமான் கொண்ட படலம், 6, 34, 36, 38, 51; யாத்திரைப் படலம், 47; சுறாச்கத்துப் படலம்; 24; கபுகாபுப் படலம்: 29, 49; விருந்திட்டு ஈமான் கொள்வித்த படலம்; 7, 14: உகுபான் படலம்; 22, 23, 24, 25; சம்மான் பாரிசுப் படலம்; 24, 30, 32; ஒநாய் பேசிய படலம், 17; பாத்திமா திருமணப் படலம்: 190; பதுறுப் படலம்: 258; அமுறாப் படலம்: 3; உயை வந்த படலம்: 38, 39, 98, 183, பனீ குறைலா வதைப் படலம்: 26, 33 லுமாம் ஈமான் கொண்ட படலம்: 6,8; உமுறாவுக்குப் போன படலம்: 57, 62.

மற்றொரு முக்கியமான இஸ்லாமிய அறபுப் பதம் புர் கான். நல்லவற்றறைத் தீயவற்றிலிருந்து வேறாக்கிக் காட்டுவது ஹலாலா-(ஆகுமான) வற்றை ஹறாமான (விலக்கப் பட்டவற்றிலிருந்து) வேறாக்கிக் காட்டுவது என்பது இதன் பொருளாகும். சரியானவற்றை பிழையானவற்றிலிருந்து அறியும் வாய்ப்பை அளிக்கும் அடிப்படையாக அது அமைகிறது. அல்குர்ஆன், புர்கான் என அழைக்கப்படுகிறது. குர்ஆன் என்னும் அறபுச் சொல் 'கறா' என்னும் அடியிலிருந்து பிறந்துளளது. இதுவே 'இக்றஉ' என்ற உருவில் ஓதுதல் என்னும் பொருளில் அண்ணல் நபி (சல்) அவர்களுக்கு முதன் முதலில் அருளப்பட்ட திருமறை வாக்கியத்தின் ஆரம்பமாக அமைந்துள்ளது. புர்கான் என்னும் அறபுப் பதமும் சீறாப் புராணத்திலே பல இடங்களில் ஆளப்பட்டுள்ளமையைக் காணலாம்.