பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

277


நஸ்றா என்னும் பெயரை உடைய பண்டிதன் அண்ணல் நபி (சல்) அவர்களை இளம்பருவத்திலே கண்டதும் பழைய வேதங்களின் உட்பொருளினை அறிந்தவனாதலினால் பெருமானார் அவர்களுக்கு அல்லாஹ் புர்கான் என்னும் வேதத்தை இறக்குவான் என்று முன் கூட்டியே அறிவித்தான். இதனையே உமறுப்புலவர்,

"வியனுறு புறுக்கா னென்னும் வேதமொன் றிறங்கும்" [1]


எனக் குறிப்பிட்டுள்ளார். ஒரு சந்தர்ப்பத்தில் நபிகள் பெருமானார் (சல்) அவர்கள் புறுக்கான் வேதம் அறிவின் ஊற்று என்றும், அவ்வூற்றிலிருந்து பொருள் சுரந்து கொண்டிருக்கிறது என்றும், அது நன்மை பொருந்திய வேதம் என்றும் கருத்துப்படக் கூறியமையை,

"ஊறிய பொருட்புறுக் கானென் றோதிய
தேறுநன் மறை...........' [2]

என உமறுப்புலவர் தமது சீறாப்புராணத்தில் அமைத்துப் பாடியுள்ளார். அமுதம் ஊறும் ஊற்றாக,புறுக்கான் வேதம் விளங்குகிறது என்பதனை,

“........................அமுத முறும்
வேதமெனும் புறுக்கான்... ..." [3]


என்றும் அல்லாஹ்வின் மிகத் தூய்மையான வார்த்தைகளைக் கொண்டது புறுக்கான் என்னும் வேதம் என்பதனை,

"................. ஆதிதன் தூயமொழி
புறுக்கான் வேத.........' [4]

  1. 1. சீறா. பாதை போந்த படலம்
  2. 2.சீறா. உடும்பு பேசிய படலம் 15
  3. 3.சீறா. உத்துபா வந்த படலம் 18
  4. 4.சீறா. உத்துபா வந்த படலம் 18