பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

280

என அமைந்திருந்தால் இத்தகைய முக்கியமான ஒரு வேறுபாடு சீறாப்புராணத்தில் தோன்றி இருக்காது என்பதே எனது நம்பிக்கை. ஒரு வேளை முதலாவது பதிப்பில் ஏற்ப பட்ட பிழையாக இது இருக்கலாம் அதன் பின்னர் பதிப்பித்தவர்கள் இந்தப் பிழையைத் திருத்தத் தயங்கி இருக்கலாம். அல்லது கருத்து வேறுபாடு காரணமாக இந்தத் தவறு ஏற்பட்டிருக்கலாம். இப்பாடலில் இருந்து நா லாயத், என்னும் சொற்றொடரில் உள்ளதைவிட இருந்தைந்தாயத்' என்று அச்சொற்றொடர் இப்பாடலில் அமையப் பெற்றிருந்தால் சீர் அமைப்பு நன்றாயிருந்திருக்கும். யாப்பமைதியும் பெற்றிருக்கும். ‘......சூறத்தில் முஸம்மிலெனுஞ் சுருதி வசன மிறங்கினவே’ (தொழுகை வந்த வரலாற்றுப் படலம் 36) என்பது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முஸ்லீம்களின் அன்றாட வாழ்க்கையில் பேச்சு வழக்கிலும் கூடப் பொதுவாக வழங்கப்படும் மற்றொரு அறபுச் சொல் கலிமா. கலிமா என்னும் சொல்லின் நேரடிக் கருத்து ‘சொல்’ என்பதாகும். சொல் என்னும் பொருளிலே அல்குர் ஆனினும் கலிமா என்னும் பதம் உபயோகிக்கப் பட்டுள்ளது. (3:39, 3:64; 4:71; 6:34, 6:115.) இஸ்லாமிய பரிபாஷையில் கலிமா இஸ்லாமிய மூலமந்திரத்தைக் குறிப்பிடுகின்றது. அல்லாஹுத்த ஆலா அன்றி வேறு நாயகன் இல்லை! முகம்மது (சல்) அவர்கள் அவனின் திருத்தூதரா வார்கள்’ என்னும் கருத்தைக் கொண்ட ‘லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர்ற சூலுல்லாஹ்’ என்னும் அறபு வாக்கியத்தைக் குறிப்பிடவே கலிமா என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது. இந்த சொற்றொடரை "லா இலாஹ இல்லல்லாஹ்' என்றும் ‘முஹம்மதுர்ற சூலுல் லாஹ்’ என்றும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். முன்னையது அல்குர்ஆனில் உள்ள குறத் முஹம்மத் (47:19) என்பதிலும் பின்னையது குறத்துல் பத்ஹ (47:19) என்பதிலும் இடம் பெற்றிருக்கின்றன. இனி, இந்தக் கலிமா என்னும்