பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

284


கண்ணுற்ற படலம் 29) என்றும், 'கவினுறுங் கலிமா' (அத்தா ஈமான் கொண்ட படலம் 10) என்றும், 'மந்திரக் கலிமா' (அத்தா ஈமான் கொண்ட படலம் 12) என்றும் சென்னயக் கலிமா வோதி' (ஜின்கள் ஈமான் கொண்ட படலம் 14) என்றும் 'பலனுறுங் கலிமா தன்னை" (ஜின்கள் ஈமான் கொண்ட படலம் 30) என்றும் 'கோதருங் கலிமா வோதி (ஜின்கள் ஈமான் கொண்ட படலம் 33) என்றும் 'அமுத மெனுங் கலிமா' (காம்மாப் படலம் 29) என்றும் 'விதி முறைக் கலிமா வோதி' (மதீனத்தார் ஈமான் கொண்ட படலம் 25) என்றும் ஒன்றிய திருக்கலிமாவை யோதியே (மதீனத்தார் ஈமான் கொண்ட படலம் 62) 'செழுங் கலி மா' (யாத்திரைப் படலம் 33) என்றும் 'இருங்கலி மா மொழி’ (உம்மி மகுபதுப் படலம் 18) என்றும் கட்டுரை கலிமா' (கபுகாபுப் படலம் 5) என்றும் 'சலிமா வென்னு முத்தாரம் பிறக்கத் தீட்டு மெழுத்தினை' (கபுகாபுப் படலம் 26) என்றும் 'பண்கெழுங் கலிமா வென்னு பத்தி வேரியத்த தூன்றி, (கபுகாபுப் படலம் 29) என்றும் 'நன்னிலைக் கலிமா தன்னை கபுகாபுப் படலம் 39) என்றும் 'ஆரணக் கலிமா' (கபுகாபுப் படலம் 56) என்றும் 'இதமுறுங் கலிமா எடுத்தினி தோதி (விருந்திட்டு ஈமான் கொள்வித்த படலம் 14) என்றும் 'இதமித்த நபி கலிமா' (வத்தான் படைப் படலம் 42) என்றும் 'மறை மொழிக் கலிமா' (பாத்திமா திருமணப் படலம் 131) என்றும் 'செழுங் கலி மா' (அசீறாப் படலம் 36) என்றும் 'காரணக் குரிசின் முகம்மது நபிதங் கட்டுரை மறைக்கலி மாவை' (பதுறுப் படலம் 25 ) என்றும் முண்ணிறை கலிமா வோதியீ மான் கொண்டு' (பதுறுப் படலம் 253) என்றும் நன்னயக் கலிமா (குதிரிப் படலம் 3) என்றும் 'மருந்தெ னுங்கலி மாவுரை விதைந்து (அசனார் பிறந்த படலம் 1) என்று, 'அருங்கலி மா' (அசனார் பிறந்த படலம் 7) என்றும் 'ஆர ணக்கலி மா' (உசைனார் பிறந்த படலம் 1) என்றும் 'ஆரணக் கலிமா (தாத்துற்றஹாக்குப் படலம 2) என்றும் 'வரன்முறைத்திற நடவிய மறையுறைக் கலிமா