பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

285


(தாத்துற்றஹாக்குப் படலம் 100) என்றும் 'கன்னல் பொன்மொழித் திருக்கலிமா' (தாத்துற்ற ஹாக்குப் படலம் 103) என்றும் 'நோய மாங்கலி மா' (பனீகுறைலா வதைப் படலம் 47) என்றும் 'நற்கலிமா' (பனீகுறைலா வதைப் படலம் 49) என்றும் 'வேதத் தின்பமிகுங் கலிமாவை' (லுமாம் ஈமான் கொண்ட படலம் 9) என்றும் 'கரும்பெனு மறைக்கலி மாவை' (சல்மா பொருத படலம்) என்றும் அடை அடுத்துச் சீறாப்புராணத்திலே பல இடங்களில் 'கலிமா என்னும் அறபுப் பதம் உபயோகிக்கப்பட்டுள்ளமையை அறியலாம்.

கலிமா என்னும் அறபுச் சொல் அடைமொழிகள் எதுவுமின்றித் தனிமையாகப் பல பாடல்களில் இடம் பெற்றிருப்பதையும் காணலாம். அவ்வாறு இடம் பெற்ற, படலங்களும் பாடல்களும் பின் வருமாறு:

நபியவதாரப் படலம் 99 : உமறுகத்தாப் ஈமான் கொண்ட படலம் 92; மானுக்குப்பிணை நின்ற படலம் 68; ஒப்பெழுதித் தீர்த்த படலம் 29; புத்துபேசிய படலம் 1, 2, 3, 4, 11, 12; ஜின்கள் ஈமான் கொண்ட படலம் 6, 33, 36, 56, 62; மதீனத்தார் வாய்மை கொடுத்த படலம் 24; விட மீட்ட படலம் 43: கபுகாபுப் படலம் 46, 68; விருந்திட்டு ஈமான் கொள்வித்த படலம் 7: பாத்திமா திருமணப் படலம் 28: அசீறாப் படலம் 33, பதுறுப் படலம் 165, 234, 251, உகுதுப் படலம் 241, லூம ஈமான் கொண்ட படலம் 6, 8; சல்மா பொருத படலம் 6, உறணிக் கூட்டத்தார் படலம் 1.

இஸ்லாமிய மந்திரமான கலிமா என்னும் பதத்தை உமறுப்புலவர் விரிவாக விளக்கியுள்ள சநதர்ப்பங்களை எடுத்துக்கொள்வோம். பொதுவாகக் கலிமா வைக் கட்டுரை என வழங்குவார். கட்டுரை என்றால் உறுதிச் சொல் என்றும், பொருள் பொதிந்த சொல் எனறும் பொருள்படும். மணிமேகலை: சிறைவிடு காதை: 5; சிலப்