பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

289


சிரைத்தலுந் தீன் கலி மாவை பின்புற
வுரைத்திடுந் தொனிக்கட லுடைத்துக் காட்டுமால்." [1]

பாத்திமா நாயகி (றலி) அவர்களினதும் அலி (றலி) அவர்களினதும் திருமணத்திற்காக நகரம் விழாக்கோலம் பூண்டது என உமறுப்புலவர் வருணனையில் கலிமாவும் இடம் பெறுகிறது பொன் நிறத்தை உடையகொடிகள் அங்கு இருந்தனவாம். அந்தக் கொடிகள் நூலினால், கட்டப்பட்டு இருந்தனவாம். சித்திர வேலைபாட்டுடன் திகழ்ந்தனவாம் அந்தக் கொடிகள். அங்கே அகமது நபி (சல்) அவர்களின் திருக்கலிமா பொறிக்கப்பட்டிருந்தனவாம். இத்தகைய கற்பனை நயம் மிக்கதாய் வருணிப்பதற்கும் உமறுப்புலவர் இஸ்லாத்தின் மூல மந்திரமான கலி மாவைப் பயன்படுத்தியுள்ளமை நயத்தக்கது.

"கழிக ளிற்பொதிந் தகுமது நபிதிருக் கலிமா
வெழுது சித்திரப் பொற்கொடி யணிநிரைத் திருவார்'[2]

இவ்வாறு இஸ்லாமிய மூல மந்திரமான கலிமா என்னும் அறபுச்சொல் சீறாப்புராணத்தில் பல இடங்களில் ஆளப் பட்டுள்ளது.

முஸ்லிம்களின் பேச்சு வழக்கில் இடம் பெறும் இரண்டு அறபுச் சொற்கள் தீன், குப்ர் என்பனவாகும். இஸ்லாமிய சமயத்தை அறபு மொழியில் தீன் என்று வழங்குவர். இஸ்லாம் அல்லாத தன்மையே அறபு மொழியில் குப்ர் என வழங்கப்படுகிறது. குப்ர் என்னும் இச் சொல்லிலிருந்தே பெறப்பட்ட காபிர் என்னும் சொல் முஸ்லிம் அல்லாதோரைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது அல்குர் ஆனிலே இஸ்லாமிய சமயத்தைக் குறிப்பிட தீன் என்னும்


19

  1. 1. சீறா. ஹபீபுராஜா வரிசைவிடுத்த படலம் 13
  2. 2. சீறா. பாத்திமா திருமணப் படலம் 82