பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

296


அலர்களது உம்மத்து ஆனவர்கள் தம் பாவங்கள் அற்றுப் போகும். அவர்களுக்கு மோட்சகதி உண்டாகும். வானவர்களான மலாயிகத்துமார்களும் அவர்களது கலிமா என்னும் மூலமந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருப்பார்கள். இவ்வாறு கூறினார் அந்தப் பண்டிதர், இவற்றையே உமறுப்புலவர் இவ்வாறு விவரித்துள்ளார்.

"பவியினின் முகம்ம தென்னப் பொருந்திய பெயருண் டாகு
மவரலா னபியின் னில்லை யவரும்மத் தானோர்க் கெல்லாம்
பவமறுங் கதியுண்டாகும் படைப்புணும் வானோரெல்லாஞ்
சுவைபெறுங் கலிமாச் சொல்வ ரென்னவே சொல்லி னாரால்.[1]

சல்மான் பாரிசு (றலி) அவர்கள் அடிமையா இருந்த சமயம் விடுதலை பெற விரும்பின் ஒரு நிபந்தனை நிறைவேற்றப் படல் வேண்டும் என்று அவருக்குக் கூறப்பட்டது. இந்த நிபந்தனையைச் கொண்டு அவர் நபிகள் நாயகம் (சல்) அவர்களிடம் சென்றார்கள். உபதேசம் பண்ணும்படி கோரினார்கள். யாராவது அண்ணல் நபி (சல்) அவர்களைத் தேடிச் சென்று கண்டால் அல்லது இறந்துவிட்டால் உண்மையிலேயே அந்த எண்ணத்துக்காக அத்தகையோர் இந்த உம்மத்தைச் சேர்ந்தவராகி விடுகிறார். அதன் பயனாக இஸ்லாத்திலே சேர்ந்து தீன்மார்க்கத்திலே சலாமத், அமைதியைப் பெறுவார். இவ்வாறு அண்ணல் நபி (சல் அவர்கள் கூறியமை பற்றி உமறுப் புலவர் இவ்வாறு பாடுகிறார்.

"இருநிலத்திடைப் பிறந்துநன் னபியென விவனின்
வருவ ரென்றெனைத் தேடிய வுண்மைவல் லவர்க

  1. 1. சீறா இசுறா காண் படலம் 41