பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

297


ளரிதிற் காண்கினு மிறக்கினு மும்மத்தி னவராய்ப்
பெருகுந் தீனில் ச லாமத்துப் பெறுவர்களென்றே."[1]

அறபு மொழியிலே கட்டாயமானவை "பர்ளு" என்றும் வழங்கப்படுகின்றன. அல்லாஹ்வினால் ஏவப்பட்டு நிறுவப் ட்டுள்ள மார்க்கச் சட்டதிட்டங்களுள் கட்டாயம் கடைப் பிடிக்கப்படவேண்டியவை பர்ளு என்றும் விருப்பத்துக் கிணங்கப் பின்பற்றப்பட வேண்டியவை சுன்னத் என்றும் அழைக்கப்படுகின்றன. வழக்காறு, பாதை, வாழ்க்கை முறை என்பனவும் சுன்னத் என்னும் அறபுச் சொல்லின் கருத்துக்களாகும். பெரும்பாலும் பர்ளு, சுன்னத் என்னும் இரண்டு அறபுப் பதங்களாலும் இஸ்லாத்தில் விதிக்கப் பட்டுள்ள சட்டங்களும் பிரமாணங்களும் உள்ளடக்கப்படுகின்றன. நபிகள் பெருமானார் (சல்) அவர்களின் கொள்கைகளினாலும் அவர்கள் பின்பற்றிய வாழ்க்கை முறையினால் நிறுவப்பட்டுள்ள விதிகளும் பிரமாணங்களும் சிறப்பாக சுன்னத் என அழைக்கப்படுகின்றன. 'விருத்த சேதனத்தை"க் குறிப்பிடவும் சுன்னத் என்னும் அறபுப் பதம் உபயோகப்படுகின்றது. இங்கே வழக்காறே சுட்டப்படுகின்றது. சேதனம் என்னும் பொருளில் உமறுப்புலவர் "......... மருவு சுன் னத்துஞ் செய்யலாய்......பிறந்தனர் முகம்மது நபியே, (நபியவதாரப் படலம் 88) என்னும் சொல்லை உபயோகித்திருப்பது நோக்கற் பாலது. ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டில் நோன்பு நோற்றல் முஸ்லிம்களுக்கு விதியாக்கப்பட்டது. றமளான் மாதம் நோன்பு நோற்றல் பறுளாக்கப் பட்டுள்ளது. இதனையே உமறுப்புலவர்

"பெறுகதி றமளா னென்னப் பெருகிய நோன்பு தன்னை
யுறுதிகொண் டெவர்க்குஞ் செல்வி யுறுபறுலாக்கி னேனென்." [2]

  1. 1. சீறா. சல்மான் பாரிசுப் படலம் 35
  2. 2. சீறா பதுறுப் படலம் 1