பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

299


தில் குறிப்பிடப்படுகிறது. ஹிஜ்றி நான்காம் ஆண்டு முஸ்லிம்களுக்கு கஸ்றுத் தொழுகை விதியாக்கப்பட்டது என இறைமறை வசனம் இறங்கியது. இதனையே சீறாப்புராணம் இவ்வாறு வருணிக்கின்றது.

"வந்த தெண்ணிய கிஜூறத்து நான்கெனும்வருடஞ்
சிந்தை கூர்தரக் கசறெனுந் தொழுகையைச் செய்த
லெந்த நாடடினு மேகுவோர் மேல்பறு ளென்ன
வந்த மில்லவ னாரண மிறங்கின வன்றே".[1]

தாத்துற்றஹ்ஹாக்கு என்னும் பதியில் வாழும் கத்துகான் என்னும் கூட்டத் தாருடன் மோதிய சந்தர்ப்பத்தில் பறுளான தொழுகையை நிறைவேற்றியமை, மன்னியபறுளென்றேத்தும் வணக்கமு முடிந்ததன்றோ" (தாத்துற்ற ஹாக்குப் படலம் 15) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நபிகள் பெருமானார் (சல்) அவர்கள் மக்க மாநகரிலிருந்து மதினமா நகருக்குச் சென்று நான்கு ஆண்டுகள் நிறைவுற்றன. ஐந்தாவது ஆண்டு ஆரம்பமானது. அப்பொழுது முஸ்லிம் கள் மீது ஹஜ் கடமை விதியாக்கப்பட்டது. மக்கமா நகருக்கு மேற்கொள்ளும் புனிதப் பயணமான ஹஜ் முஸ்லிம்களுக்குக் கடமை ஆக்கப்பட்டது. இதனையே உமறுப் புல்வா ,

'விலக்கரிய வருடமொரு நான்கு நிறைந்
தைந்தாண்டு மேவும் போதி
லைக்கணுறாச் சுடரொளியா மல்லாவின்
பணிவிடையா வவனி மீதிற்
றுலக்கமுற வந்த ஹஜ்ஜுபறுளான
தின்றுமுதற் றொழுவீ ரென்றே"".[2]

  1. 1. சீறா. உசைனார் பிறந்த படலம் 1
  2. 2. சீறா லுமாம் ஈமான் கொண்ட படலம்