பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

302


என்றும் பழைய முறைப்படி எல்லோரும் ஹஜ்ஜினை நிறைவேற்றினர் என்பது,

"போந்துகஃபாவினிற் புகுந்து தொன்முறை
யேய்ந்த ஹஜ் ஜெனுநெறி முடித்திட்டாரே" [1]

என்றும், அனைவரும் ஹஜ்ஜினை முறைப்படி நிறைவேற்றி விட்டு அவரவர் பதிகள் நோக்கிச் சென்றனர் என்பது,

"முறைமை யாகிய ஹஜ் ஜினைக் குறைவற முடித்துப்
புறநிலத்த வரு மவரவர் பதியினிற் போனார்". [2]

என்றும் விவரிக்கப்பட்டுள்ளது.

உம்றாவுக்குப் போன படலத்தில் ஹஜ் பற்றியும் உம்றா பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்கத்தி, லோது ஹஜ்ஜுமு றாச்செய்ய வுன்னியே' (2) என்று அவர்களின் எண்ணத்தையும் நன்றி சேர்ஹஜ்ஜ செய்திடா திடர்சில நடத்தி (40) என்று அவர்களுக்கு ஏற்பட்ட தடையையும் 'அரிய ஹஜ்ஜூமு றாச்செய வந்தன மடுத்தே' (41) என்று அவர்களின் உண்மையான குறிக்கோளையும் ......உவந்த ஹஜ்ஜமுறாச் செய்ய' (84) என்று அடுத்த ஆண்டு அனுமதி வழங்கப்படும் என்னும் உறுதியையும்,

"காயத்தி னானம் லீசும் ஹபீபுஹஜ் செய்ய நீயத்து நினைத்த தன்மை தடையற நீங்க வேண்டித் தேயத்தோர் புகழ வொட்டை யறுத்துநற் குறுபான் செய்தே" (88).

என்று தங்களது கடமையை நிறைவேற்ற முடியாமல் போனாலும் தங்களின் நிய்யத்தை, எண்ணத்தை நிறைவேற்றக் குர்பான் கொடுத்தமையையும் உமறுப் புலவர்

  1. 1. சீறா. மதீனத்தார் வாய்மை கொடுத்த படலம் 3
  2. 2. சீறா யாத்திரைப் படலம் 16