பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

303


சிறப்பாக அமைத்துப் பாடியுள்ளார். உம்றா என்னும் அறபுச் சொல் தனிமையாக 7 ஆம் 72 ஆம் செய்யுட்களில் இடம் பெற்றுள்ளது.

இஸ்லாத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டாய கொடை அரபியில் 'ஸக்காத்' என வழங்கப்படுகிறது. அதன் மூலக் கருத்து தூய்மைப்படுத்துதல் என்பதாகும். தொழுகையை உறுதியாக்கப் பின்பற்றுங்கள், ஸ்க்காத் பழக்கத்தைப் வழமையாக்கிக் கொள்ளுங்கள் என்று கூறுகிறது அல் குர் ஆன் (2:43, 110.) இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றான ஸக்காத் முஸ்லிம்களால் பின்பற்ற வேண்டியதொன்றாகும். திருக்குர் ஆனிலே பெரும்பாலும் தொழுகையும், ஸக்காத்தும் இரட்டைக் கடமைகளாகவே குறிப்பிடப் படுகின்றன. அடுத்தடுத்துச் சீறாப் புராணத்திலும் இம் முறையே பின்பற்றப்படுகிறது.

"......காலமைந்துந் தொழுக வென்றுங்
காதலுடன் ஸக்காத்து..." [1]

தான தருமங்களைக் குறிக்க 'ஸதக்கா' என்னும் அறபுச் சொல் பயன்படுத்தப்படுகின்றது. இச்சொல் இதே கருத்தில் திருக்குர் ஆனிலே (2:234, 27 ) உபயோகிக்கப்பட்டுள்ளது அச்சொல்லின் நேரடிக் கருத்து நன்னெறியில் இருத்தல் என்பதாகும். வேதத்திலே குறிப்பிடப்பட்டுள்ள முறைமைக்கு இணங்க ஐந்து நேரமும் தொழுங்கள்: நல்லவிழுமிய எண்ணத்தோடு ஸதக்கா வழங்குமின் என பாத்திமா நாயகி (றலி) அவர்களின் திருமண விழாவினையொட்டி முறையன் பேரொலி முரசொடு ஒட்டகத்திலிருந்து கடிமுரசறைந்தான் என்பதை,

  1. 1.சீறா லுமாம் ஈமான் கொண்ட படலம் 5