பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

304



"சுருதி தேர்தவ றின்றியஞ் சொகுத்தினுந் தொழுமின்
வரிசை நன்னினை வொடும்சதக் காவழங்கிடுமின்," [1]

என்றும் இமாம் ஹூசைன் (றலி) அவர்கள் பிறந்து ஏழாம் நாள் அவர்களின் தலைமயிரை நீக்கி அதன் நிறைக்குச் சமமாகப் பொன்னை ஸதக்காவாகக் கொடுத்தார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் என்பதை, -

"தெரித ரத்தின மேழினிற் செம்புவி புரக்கு
கரசர்நாயகர் வகள்மனை யடுத்தரும் புதல்வன்
கரிய மென்சிர மயிரினைக் களைவித்தவ்வெடையி
னிரசி தஞ்சதக் காவென வெடுத்தினி தளித்தார்" [2]

என்றும் கணக்கற்ற திரவியத்தை சதக்காவாகக் கொடுக்கப்பட்டமையை,

"அலகிலா நிதியந் தனைச்சதக் காவென்
றவரவர்க் களித்தனன் பறித்து."[3]

என்றும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் சதக்கா கொடுக்கப்பட்டுள்ளமையை,

"ஆலய மறந்த தீனுடை ஹபீபுக்
கன்பொடு முவப்டொடுஞ் சதக்காச்
சாலவு மருளி ... ... ... ..."[4]

என்றும் வருணிக்கப்பட்டுள்ளமை ஈண்டு நோக்கற்பாலது.

வேளை, நேரம் என்பதனைக் குறிக்க அறபியில் 'வக்த்'

என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது. இதே கருத்துக்களில் 'ஸாஅத்' என்னும் சொல்லும் பயன்படுத்தப்படுகிறது.

  1. 1. சீறா. பாத்திமா திருமணப் படலம் 72
  2. 2.சீறா. அசனார் பிறந்த படலம் 16
  3. 3.சீறா. ககுபு வதைப் படலம் 46 52
  4. 4.சீறா. ககுபு வதைப் படலம் 46 52