பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

307


என்றும் நபிகள் பெருமானார் தொழுவதற்காக உலுச் செய்த பின்னர் நீரை தத்தம் கரங்களில் தோழர்கள் ஏந்தினர் என்பதனை,

"தொழுகைக் காலத் துலுச்செயும் புனலை வேட்டுத்
தாவறக் கரங்களேத்தித் தளர்பவர் சிலபே ரம்ம" [1]

என்றும் உமறுப்புலவர் குறிப்பிட்டுள்ளமை ஈண்டு நோக்கற் பாலது. உலு என்னும் சொல்லை "ஒது என முஸ்லிம்களின் பேச்சு சர்வ சாதாரணமாகப் பயன்படுத்துவது போல சீறாப்புராணத்திலும் ஒது என 'ஒதுவுடன் வரு முறை யொழுதி..." [2]

என்று ஆளப்பட்டுள்ளது.

ஒரு முறை நபிகள் பெருமானார் (சல்) அவர்கள் தங்கள் தோழர்களுடன் தண்ணிர் அற்ற ஓர் இடத்தை அடைந்தார்கள். தொழுகை நிறைவேற்றப்பட வேண்டிய சமயம் அது, தொழுகைக்காக உலு செய்ய நீர் இல்லாமல் இருந் தது. உடனே ஜிபுறீல் (அலை) அவர்கள் அவ்விடத்துத் தோன்றி 'நீரைக் கொண்ட தடாகங்கள் இல்லாத விடத்து தடையில்லாமல் தொழுகையை தயமுஞ் செய்து நடத்தலாம்' என்னும் இறை வசனங்களை அண்ணல் நபி (சல்) அவர்களுக்கு அறிவித்தார்கள். இதனையே,

"நெஞ்சாகுல மறுநீரக மில்லாவிட நியமந் துஞ்சாவகை தயமுஞ்செய்து தொழுமேலவன் விதியின்

  1. 1. சீறா. உமுறாவுக்குப் போன படலம் 67
  2. 2. சீறா. உடும்பு பேசிய படலம் 37