பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

308


"மிஞ்சாரண மொழியகரமு திஃதென்ன விரைந்து
மஞ்சார்வெளி வழியேகொடு வகந்தார்ஜிபுறீலே." [1]

என விவரிக்கிறார் கவிஞர் உமறு. இக்கட்டளைக்கு இணங்க அனைவரும் தயமுஞ் செய்து தொழுகையை நிறைவேற்றினர். இதனையே சீறாப்புராணம் இவ்வாறு வருணிக் கின்றது.

"..............................இவரும்பிற ருமுள
முருகும்படி பிறிதொன்றையு நினையாதொரு பொருளைத்
தருமந்திர நெறியின்படி தயமுஞ்செய்துதொழுதார்" [2]

முறைசீக்குப் படலத்தில் உள்ள 41-வது செய்யுளிலும் தயமும் என்னும் இச்சொல் ஆளப்படுகின்றது.

உலகத்தில் முஸ்லிம்கள் எங்கெங்கு வாழ்கின்றார்களோ எந்தெந்த மொழிகளைப் பேசுகின்றார்களோ அங்கங்கெல்லாம் அந்த அந்த மொழிகளைப் பேசும் போதெல்லாம் அவர்கள் அல்லாஹ்வைத் தொழும் ஐந்து வேளைகளையும் குறிப்யிட அறபுச் சொற்களையே வழங்குகின்றனர். ஸ்லாத்துள் பஜ்றி அல்லது ஸலாத்துல் ஸுபஹ் என்று வைகறைப் பொழுதில் சூரிய உதயத்துக்கு முன்னர் நடைபெறும் தொழுகையையும் ஸலாத்துல் ளுஹர் என்று நண்பகலில் நிறைவேற்றப்படும் தொழுகையும் ஸலாத்துல் அஸ்றி என்று பிற்பகலில் நடுப்பகுதியில் நடத்தப்படும் தொழுகையும் ஸலாத்துல் மஃறிப் என்று சூரிய அஸ்தமனமான உடனே நிகழ்த்தப்படும் தொழுகையும் ஸலாத்துல் இஷா என்று இரவின் முற்பகுதியில் நடைபெறும் தொழுகையும்

  1. 1. சீறா. முறைசீக்குப் படலம் 39
  2. 2. சீறா. முறைசீக்குப் படலம் 40