பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

309


அரபுச் சொற்களாலே வழங்கப்படுகின்றன. வைகறைப் பொழுதில் நடைபெறும் தொழுகை முதலியவை திருக்குர் ஆனிலே (17:78) குறிப்பிடப்படுகிறது.

சீறாப்புராணத்தில் இத்தொழுகைகள் அரபுச் சொற்களாலேயே வழங்கப்படுகின்றன. கிழக்கு வெளுத்ததும் வைகறைத் தொழுகையான பஜ்றுத் தொழுகை அடுத்தது எனபது.

"..................... ...... கீழ்த்திசை
விரிதர வெளுத்தது விரைவி னன்நபி
யரியவற் றொழபஜ் றடுத்த..." [1]

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பஜ்றுத் தொழுகை சூரிய உதயத்துக்கு முன்னர் நிறைவேற்றப்பட வேண்டியதொன்றாகும். பஜ்றுத் தொழுகைக்குரிய நேரம் முடிவுறப் போகின்றது என்று அத்தருணத்து நிகழ்ச்சிகளை பின்வருமாறு விவரிக்கிறார் உமறுப்புலவர்.

"தேய்கின்றதிவ் விரவும்வெளி தெரிகின்றது கதிரும்
பாய்கின்றது கலனுங்கணிற் படுகின்றில பஜூறு
மால்கின்றது தொழவிவ்வுழை யெவ்வாறென மனத்து
ளாய்கின்றனர் மனையார் துளை யணைமேற்றுயில் செய்தார்".[2]

நண்பகலில் சூரியன் உச்சியிலிருந்து சற்றுத் சாய்ந்ததின் பின்னர் நிறைவேற்றப்படுவது ஸலாத்துல் லுஹ்ர் என்னும் றொழுகை. முஸ்லிம்களின் கிப்ளாவாக கஃபத்துல்லா ஏற்பட்ட சம்பவத்தைக் குறிப்பிடும் பொழுது லுஹ்ர் தொழுகை குறிப்பிடப்படுகிறது.

  1. 1. சீறா புலாத்துப் படலம் 9.
  2. 2.சீறா முறைசீக்குப் படலம் 28