பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

310


"......லுஹ்று நேரத்தில்..." [1]

"நினைப்பரும் பொருளை யேத்தி லுஹ்றினைத் தொழுது நின்றார்."[2]

என்றும் வந்துள்ளமை காண்க.

பிற்பகுதியின் நடுப்பகுதியில் நடைபெறும் அஸ்ர் தொழுகை ஸலாத்துல் வுஸ்தா எனத் திருக்குர்ஆனிலே (2:238) குறிப்பிடப்படுகிறது. ஐவேளைத் தொழுகையாக அமைத்துள்ளமையால் அத்தொழுகை அவ்வாறு அழைக் கப்படுகின்றது என்பர் அறிஞர். உலகக் கருமங்களுக்கு மத்தியில் முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வை நினைவுபடுத்து முகமாகவே இத்தொழுகை அவ்வாறு ஏற்படுத்தப்பட்டது என்றும் அத்தகையோர் கருத்துத் தெரிவிப்பர். மனிதனுடைய ஐந்து புலன்களையும் அடக்குவதற்காகவே அஸர் தொழுகைக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது என அஸர் தொழுகைக்கு வரையறை கூறப்பட்டுள்ளது சீறாப்புராணத்தில்,

"அன்னது போயதாலென் சைறெனுந் தொழுகை யொன்றுண்
டின்னுமத் தொழுகை தீனோ ரென்பவர்க் குரியதன்றோ
மன்னிய புலன்க ளைந்து மனவெளி வளியிற்செல்லப்
பன்னிய நிலந்தின் வீழ்த்து பத்தியின் முடிக்க வேண்டும்.” [3]

"ஆரணப் பொருளை யோர்ந்த அளவினில் அசறு தோன்ற.."[4]

என்றும்,

  1. 1. சீறா. ககுபத்துல்லாவை நோக்கித் தொழுத படலம் 4
  2. 2 சீறா. தாத்துற்றஹாக்குப் படலம் 10
  3. 3. சீறா. தாத்துற்றஹாக்குப் படலம் 18
  4. 4. சீறா. தத்துற்றஹாக்குப் படலம் 22