பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

311


"அசறடுத்த பொழுது மடுத்ததால்" [1]

என்றும், .

"அன்றுக லிகல்குபிர ராலசறு வணக்கங்கலா வானதென்ன".[2]

என்றும்,

"......அசறு பாதை வணங்குமின்." [3]


என்றும்

"அமறு மட்டாகக் கண்ணின்," [4]

என்றும் அசறுத் தொழுகையைக் குறிப்பிட்டுள்ளார் கவிஞர் உமறு.

கிரியைகள் அறபு மொழியில் அமல் எனப்படும். திருக் குர்ஆனிலும் இதே கருத்தில் இச்சொல் ஆளப்பட்டுள்ளது. (9:02) அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றுதலையும் நாம் அமல் செய்கிறோம் என்றுதான் வழங்கி வருகிறோம். சீறாப்புராணத்திலும் அமல் என்னும் அறபுச் சொல் பயன் படுத்தப்பட்டுள்ளது. கலிமாச் சொல்லி ஈமான் கொண்டு அதற்குரிய கரும காரியலங்காரங்களைச் செய்வதாகிய அமல் புரிந்து நிற்றலே இஸ்லாத்தில் சேர்தலாகும் என உமறுப்புலவர் இவ்வாறு வருணிக்கிறார்.

"ஒருத்தனா யகனவற் குரிய தூதெனு
மருத்தமே யுரைகலி மாவந் நிண்ணயப்
பொருத்தம் மானடை புனைத லாம்மல்
திருத்தமே யிவையிசு லாத்திற் சேர்தலே." [5]

  1. 1. சீறா. உயை வந்த படலம் 40
  2. 2.சீறா.உயை வந்த படலம் 89
  3. 3.சீறா.பனி குறைலா வதைப் படலம் 7
  4. 4.சீறா.உமறுகத்தாப் ஈமான் கெசண்ட படலம் 48
  5. 5.சீறா.தொழுகை வந்த வரலாற்றுப் படலம் 2