பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

313

“அன்று நந்நபி தனித்தொரு வயினுரைந் தறிவா
னின்றி ரண்டிறக் அத்துநன் நெடியவனை வணங்கி”[1]

இச்சொல் ககுபத்துல்லாவை நோக்கித் தொழுத படலத்தில் ‘ஹக்கனை யிரண்டிறக் ஆத்துத் தான் தொழுது’ (4) என்றும் ‘முன்னரி ரண்டிறக் ஆத்து முற்றிய, பின்னா’ (7) என்றும் வந்துள்ளது. இதே சொல்.

“.....................மாமறை
சொல்லி ரண்டிறக் ஆத்துத் தொழுதபின்.”[2]

என்றும்,

“குறித்த நிலைரண்டிறக்க அத்து.”[3]

என்றும் தாத்துற்றஹாக்குப் படலத்தில் இரண்டு தடவையும் உபயோகிக்கப்பட்டுள்ளது.

கூறு. உஸுஜூது முதலிய பலவற்றைக் கொண்டது ஒரு றக் ஆத், இச் சொல்லும் ஒரு செய்யுளில் வேறு அறபுச் சொற்களோடு உபயோகிக்கப்பட்டுள்ளது. இமாம், மெளமூம், தக்பீர், நபி, சுஜூத் நிய்யத் என்னும் அறபுச் சொற்களும் இங்கு ஆளப்பட்டுள்ளன. செய்யுள் இதுதான்,

“ஒன்னலர்க் கெதிரோர் கூட்ட முறமற்றோர் கூட்டமெளமு
மென்னநின் றுறஇ மாமா யியனபி தக்பீர் கட்டி
நன்னிலை றுக்கூ வினோடு சுஜூதிவை நடத்தி ரண்டாம்
பின்னிலை யெய்த அன்றோர் நிய்யத்திற் பிரிதல் கொண்டே.”[4]

  1. சீறா. மதியை அழைப்பித்த படலம் 121
  2. ” அந்தகன் படலம் 3
  3. ” தொழுகை வந்த வரலாற்றுப் படலம் 36
  4. ” தாத்துற்றஹாக்குப் படலம் 23