பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

"நாயன்மார் நாவமுதும் நம்மாழ்வார் பாசுரமும் மேயபுகழ் மேகலையும் மேம்படு சிந்தாமணியும் மாமுனி தேம்பாவணியும் மாண்புறு சீறாவும்"

சமய இலக்கியத் தில் இடம்பெறுகின்றன.

இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் தமிழர்களுக்கு ஒரளவு அறிமுகமாயிருப்பது சீறாப்புராணமேயாகும். அண்ணல் நபி பெருமானாரின் அறவாழ்வை, 5027 திரு விருத்தங்களில் சிறந்த ஒரு காப்பியமாக வடித்துத் தந்திருக்கிறார் உமறுப்புலவர் (ஸீரத் என்னும் அரபுச் சொல் வாழ்க்கை வரலாறு எனப் பொருள்படும்.) உமறுப்புல வரின் முன்னோர்,

"மேவியமுல்லை, மல்லி
மேல் ரக ரோஜா தாழம்
பூவிலும் அத்தர் செய்துப்
புதுமணம் மாறா வண்ணம்
காவலர்களித்தல் தங்கள்
கைத் தொழிலாகக்"

கொண்டிருந்தனர்.

ஏறத்தாழ முன்னூறு ஆண்டுகட்கு முன்னர் எட்டயபுரத்தில் வாழ்ந்து வந்த செய்கு முகமது அலி என்ற சேகு முதலியாரின் அருந்தவப் புதல்வனாகப் பிறந்தார் உமறு. சேகு முதவியார் எட்டையபுர அதிபதியான வெங்கடேச எட்ட பூபதிக்கும் அவர் தம் அரசவைக் கவிஞராக விளங்கிய கடிகை முத்துப் புலவருக்கும் உற்ற நண்பராக விளங்கினார். உமறு தம்மிடமே கல்வி கற்க வேண்டுமென்று விரும் பிய கடிகை முத்துப் புலவரிடம் உமறு மூன்றாண்டுகளில் "இங்குள்ள அறிவு நூற்கள் யாவையும் அலசிக் கற்று, சங்க நூல் முழுதும் மாந்தி. 'செந்தமிழ்ப் புலமை பூண்டார். அக்காலை தமிழகப்புலவர்கள் அனைவரையும்சிறுமைப்படுத்தி