பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

314


தக்பீர் சுஜூது, றுக்கூஉ என்னும் அறபுச் சொற்கள் ஒருங்கே அமைந்த மற்றொரு செய்யுளின் இறுதி அடிகள் இரண்டும்

"பற்றியின் தக்பீர் கட்டித் தொடர்த்திடப்பயில் றுக்கூவு
நற்றுறை சஜூதுஞ் செய்து நாயக ரிருப்பின் மேவ" [1]

என அமைந்துள்ளது. சுஜூது என்னும் அறபுச் சொல் சில சமயங்களில் சுசூது என தமிழாக்கப்பட்டும் தருவதுண்டு. இச்சொல் வந்துள்ள ஏனைய செய்யுட்களான: தலைமுறைப் படலம் 14, நபியவதாரப் படலம் 87, 105, தீனிலை கண்ட படலம் 9,96, தாத்துற்றஹாக்குப் படலம் 23, 24, ஒட்டகை பேசிய படலம் 15.

தக்பீர் என்பதும் அல்லாஹூ அக்பர் என்னும் முழக்கத்தைக் குறிப்பதோடு தொழுவதற்கு நிற்கும் நிலையில் தக்பீர் கட்டுதலையும் குறிக்கின்றது. இவ்விரண்டு கருத்துக்களும் தொனிக்கத் தக்பீர் என்னும் அறபுச் சொல் சீறாப்புராணத்தில் உபயோகப்பட்டிருப்பதைக் காணலாம். மகிழ்ச்சிகர மான சந்தர்ப்பங்களிலும் தக்பீர் முழக்கம் செய்யப்படுவதுண்டு. உமறு கத்தாப் (றலி) அவர்கள் கலிமாவை மொழிந்து ஈமான் கொண்டு இஸ்லாத்தைத் தழுவிய பொழுது அனைவரும் மகிழ்ச்சி மேலீட்டினால் அல்லாஹூ அக்பர் என்று தக்பீர் முழக்கஞ் செய்து அல்லாஹூத்க ஆலா வைப் புகழ்ந்தார்கள். இங்கே தக்பீர் என்பது 'தக்பீறு' என்று உபயோகிக்கப்பட்டுள்ளது. இசை நிரப்பவே கவிஞர் இவ்வாறு செய்திருக்கலாம்.

"..........பெரியோ னாதி தனைப்புகழ்ந்து
மீறுங் களிப்பா நந்தமான விழைவாற் றக்கு பீறுரைத்தார்." [2]

  1. 1. சீறா. தாத்துற்றஹாக்குப் படலம் 24
  2. 2. உமறு கத்தாபு ஈமான் கொண்ட படலம் 92