பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

315

என்பதே அச்செய்யுளின் இறுதிப் பகுதி. அண்ணல் நபி (சல்) அவர்கள் நபிப்பட்டம் பெற்று ஆரம்ப காலத்தில் பைத்துல் முகத்தீசு என்னும் பதியை நோக்கியே முஸ்லிம்கள் தக்பீர் கட்டித் தொழுது வந்தனர் என்னும் குறிப்பை உமறுப்புலவர் இவ்வாறு அமைத்துள்ளார்.

“நபியெனத் தீனிலை நடத்த நாண்முதற்
கவினுறம் பைத்துல் முகத்தி சென்னுமத்
தவிசினை நோக்கியே தக்கு பீறோடும்
புவியிடைத் தொழுகையைப் பொருத்தி நின்றனர்.”[1]

ஜின்கள் ஈமான் கொண்ட படலத்திலும் (86). தாத்துற் றஹாக்குப் படலத்திலும் (23, 24) உயை வந்த படலத்திலும் (151) தக்பீர் என்னும் இந்த அறபுச் சொல் இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.

இமாம் என்றால் தலைவர் என்பது பொருள். இஸ்லாமிய பரிபாஷையிலே தொழுகையின்போது முன்னின்று நடத்துபவரையே இச் சொல் சிறப்பாகக் குறிப்பிடுகிறது. நான்கு மத்ஹபுகளையும் நிறுவியவர்களைக் குறிப்பிடவும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. உமறுப்புலவர் முதலில் இச்சொல்லால் நான்கு மத்ஹபுகளையும் நிறுவியவர்களையே குறிப்பிடுகின்றார்.

“வேதவான் களெனு நாலிமாம் கள்பத
மேலுமி யாம்புகல வேணுமே”[2]

தொழுகையின்போது முன்னின்று நடத்தப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தைக் குறிப்பிடும்பொழுது கவிஞர்,

“...தொழுகை நேரிமா மெனச்செயுந் தொழின் முறை சிறப்ப”[3]
  1. சீறா. ககுபத்துல்லாவை நோக்கித் தொழுத படலம் 1
  2. “ கடவுள் வாழ்த்து 15 3.
  3. “ பதுறுப் படலம் 11