பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

316

எனக் கூறுகிறார். தாத்துற்றஹாக்குப் படலத்திலும் (23) இச் சொல் ஆளப்பட்டது. தொழுகையின்போது ஒர் இமாமைப் பின்பற்றித் தொழுபவர்கள் மெளமுமெனப் பட்டார்கள். மெளமும் என்னும் அறபுச் சொல் இதே கருத்தில் தாத்துற்றஹாக்குப் படலத்தில் (23) இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.

எண்ணம் என்னும் பொருளில் நிய்யத் என்னும் அறபுச் சொல் தாத்துற்றஹாக்குப் படலத்தில் (23) அதே உச்சரிப்பிலும் உமுறாவுக்குப் போன படலத்தில் (88) யாப்பமைதி கருதி நீயத்து என்று முதல் நீண்டும் வந்துள்ளமை நோக்கற்பாலது.

முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கித் தொழும் திசை கிப்லா என அறபியில் வழங்கப்படுகிறது. திருக்குர்ஆனிலே (2: 142, 143, 144, 145, 10: 87) கிப்லாப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. உமறுப்புலவரும் குறிப்பிடுகிறார். நபிகள் பெருமானார் (சல்) அவர்கள் பிறந்தபொழுது கிப்லாவை முன்னோக்கியவர்களாகவே தோன்றினார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“....கிளர்கிபு லாவைமுன் னோக்கி.” [1]

சீறாப்புராணத்தில் இடம்பெற்றுள்ள மற்றொரு குறிப்பிடத்தக்க அறபுச் சொல் குத்பா என்பதாகும். வெள்ளிக் கிழமை நடைபெறும் ஜும்ஆத் தொழுகைக்கு முன்னர் நிகழ்த்தப்படும் போதனை அல்லது பிரசங்கம் குத்பா எனப்படும். இது குத்துபா எனவும் தமிழில் எழுதப்படும். முஸ்லிம்களின் முதலாவது பள்ளிவாசல் மதீனவிக்குச் சமீபமாக உள்ள குபா என்னும் தலத்தில் அமைக்கப்பட்டது. அங்கு சென்ற பின் வந்த வெள்ளிக்கிழமை அன்று இறுதி நாள் வரை குத்பா நடத்தப்படும் எனக குறித்துக் காட்டி

  1. சீறா. நபியவதாரப் படலம் 87