பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

317

னார்கள் அண்ணல் நபி (சல்) அவர்கள். இதனையே உமறுப்புலவர் இவ்வாறு பாடுகிறார்.

“அத்தலத் துறைந்து பி னடுத்த வெள்ளிநா
ளுத்தமத் தமரொருடவ் வுறைந்த பேர்கட்கு
மித்தலத் தின்றுதொட்டீறு நாண்மட்டுங்
குத்துபா வெனநபி குறித்துக் காட்டினார்.”[1]

அண்ணல் நபி (சல்) அவர்கள் உத்தரவிட்ட பின்னர் அங்கு குத்துபாத் தொழுகையை நடத்தினார்கள் என்ற விவரமும்,

“..................... நந்நபி
தோமில்வண் குத்துபாத் தொழுவித் தாரரோ,”[2]

என்றும்,

“நாயக முகம்மது நாட்கொண் டவ்விடத்
தேயுயர் ருத்துபா வியற்றினாரரோ.”[3]

என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்குப் பறுளாக்கப்பட்ட நோன்பினை முஸ்லிம்கள் அனுஷ்டித்து வந்தனர். றமளான் மாதம் 17 ஆம் நாளாயது. அன்று வெள்ளிக்கிழமை, முஸ்லிம்கள் குத்துபா தொழுதனர். பின்னர் ஒற்றர் வந்து ஏதோ கூறுகிறார். இந்நிகழ்ச்சிகளை உமறுப்புலவர்,

“பேறுலெனு நோன்பு நோற்று வருகையிற் பதினேழாய
குறைவற வெள்ளி நாளிற் குத்துபாத் தொழுத பின்னர்”.[4]

  1. சீறா. மதீனம் புக்க படலம் 37
  2. ” மதீனம் புக்க படலம் 38
  3. ” மதீனம் புக்க படலம் 39
  4. ” பதுறுப் படலம் 3