பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

319


அறபுயில் வழங்கப்படுகிறது. இங்கு எடுத்த க் காட்டப்பட்ட மழையழைப்பித்த படலத்தின் 19 ஆம் செய்யுளில் 'புகர்தினம்’ என்னும் சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளமைவைக் காணலாம். இது ஒர் அருமையான உபயோகம் எனில் அது மிகையாகாது. இலக்கண விளக்கத்தில் (883) புகர் என்னும் சொல் சுக்கிரனை குறித்து நிற் கின்றது. சுக்கிரன் என்றால் வெள்ளி என்பது ஒரு பொருள், இங்கே புகர்தினம் என்னும் சொற்றொடர் சுக்கிரத்தினம் வெள்ளியின் தினம் என்று பொருள் தரும் வெள்ளிக்கிழமை என்பதனைக் குறிக்கவே பயன்படித்தப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது.

பாத்திஹா என்பதன் பொருள் ஆரம்பம் என்பதாகும், திருக்குர்ஆனின் ஆரம்ப அத்தியாயமும் சூறத்துல் பாத்திஹா என்றே அழைக்கப்படுகின்றது. ஒரு கருமத்தை ஆரம்பிக்கும் போது ஓதுவதையும் பாத்திஹா ஓதுதல் என்பர். அதே போன்று ஒரு கருமத்தை முடிவுறச் செய்யும் பொழுதும் பாத்திஹா ஒதியே முடிப்பர். ஒரு முடிவுக்குக் கொண்டுவரும், இந்த பாத்திஹா ஒதல் என்றும் கொள்ள லாம், அலி (றலி அவர்கள் பாத்திமா (றலி) அவர்களைத் திருமணம் புரிந்துகொண்ட உடன் அவர்கள் விருப்பத் தைக் கண்ட அனைவரும் அவர்களை வாழ்த்திக் கடல் ஒலி போல் பாத்திஹா ஒதினார்கள் என்பதனை உமறுப்புவவர் இவ்வாறு வருணிக்கிறார்,

"மலிபெலன் கிரியிற் சோதி மணியினை யிருத்தல் போல
அலியிடத் திருத்தும் பாவை யழகுகண் டுவந்து மேலோ
ரொலிகடல் கிளர்ந்த தென்ன வுற்றவ ரெவருஞ் சூழ்ந்து
பலனுற வாழ்த்திப் பாத்திஹா வோதுங் காலை," [1]

  1. 1. சிறா. பாத்திமா திருமணப் படலம் 181