பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

321


யில் வித்தியாசம் இல்லாமல் இல்லை. அல்லாஹ்விடம் குறை இரங்கும் பிரார்த்தனை அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றும் தொழுகை என்னும் பிரார்த்தனையிலிருந்து வேறுபட்டிருப்பதைக் காணலாம். துஆ என்னும் அறபுச் சொல்லும் ஸலாத் என்னும் அறபுச் சொல்லும் அவற்றின் வெவ்வேறு கருத்துக்கள் தொனிக்க ஒரே வசனத்தில் திருக்குர் ஆனிலே (14:40) ஆளப்பட்டுள்ளமையைக் காணக்கூடியதாக இருக்கின்றது. ஸலாத் தொழுகையை நிறைவேற்றிய பின்னர் துஆ என்னும் பிரார்த்தனையை ஓதுதல் முஸ்லிம்களிடையே நிலவும் சர்வசாதாரணமான வழக்காறாகும்.

இஸ்லாத்தின் ஆரம்பகாலத்தில் குறைஷியரின் தொல்லை தாங்க முடியாத காலத்தில் அண்ணல் நபி (சல்) அவர்கள் அல்லாஹ்விடம் தங்களுக்குள்ள ஒரு குறையை நீக்குமாறு குறை ஆரந்தார்கள். அன்று மக்க மாநகரிலே, எல்லா வகையிலும் ஆற்றல் மிக்கவர்களாய் விளங்கிய உமறு கத்தாப் அவர்களை அல்லது அபூஜகிலைத் தங்கள் பக்கம் திருப்புமாறு வேண்டினார்கள். இஸ்லாத்தில் சேரும் வாய்ப்பை அவர்களுள் ஒருவருக்கு அளிக்குமாறு துஆக் கேட்டார்கள். இந்நிகழ்ச்சியே இவ்வாறு வருணிக்கப் பட்டுள்ளது.

"உலகி னிற்கரு தலர்க்கட லரியும றினைக்கொண்
டலத பூஜகி லினைக்கொடு தீனிலை யதனைப்
பெலனு றும்படி மெனக்கருள் பிறிதிலை யெனவே
நலனொ டுந்துஆச் செய்தனர் முகம்மது நபியே." [1]

இந்த துஆ என்னும் அறபுச் சொல் தமிழில் பெரும் பாலும் உடம்படுமெய் தோன்றும் முகமாக துவா எனத் தமிழில் எழுதப்படுவது வழக்காறாகும். பேச்சு வழக்கிலும்

  1. 1.சீறா. உமறு கத்தாபு ஈமான் கொண்ட படலம் 3