பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

322


துவா என்றே பயன்படுத்தப்படுகிறது. சீறாப்புராணத்திலும் துஆ என்னும் சொல் பல இடங்களில் துவா என்றே உபயோகப்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். 'மகிழ்ச்சி யிற் றுவாச் செய்வீரால்' (ஹபீபு மக்கத்துக்கு வந்த படலம் 73, 74) என்றும் 'இறைவனை நோக்கித் துஆவிரந் திணிரேல்' தசைக் கட்டியைப் பெண்ணுருவமைத்த படலம் 8, 15) என்றும் நபியுள் ளிடைந்திரு கையேந்தி தருந்துஆ விரப்ப (உகுபான் படலம் 7) என்றும் 'பெருகு நல்லறி வினர் துஆப் பேறுகள் பெறுமின்' (பாத்திமா திருமணப்படலம் 72, .20 179) என்றும் 'என்றிருகையேந் திநறுந்து ஆவோதி யிறை வனை யேத்தி' (உயை வந்த படலம் 89, 94, 133) என்றும் 'பூணு நேயத்தோ டுறுந்து ஆ விரந்திடும் போதில் (பனீ குறைலா வதைப் படலம் 21) என்றும் 'திருத்தருமொளியை யுன்னி துகவிரந்திருகை யேந்தி' (மழையழைப்பித்த படலம் 9,20, 21) என்றும் உன்னி யோதித் துஆவிரந்து' (அந்தகன் படலம் 4, 6) 'இகலறு மொழிகள் கூறித் துஆயிரந் திரங்கி நின்றான்’ (கவுலத்தை விட்டு கூடின படலம் 10) என்றும் இச்சொல் துஆ என்றும் துவா என்றும் சீறாப் புராணத்தில் வந்துள்ளது.

பாத்திஹாவிலே துஆ ஓதும்பொழுது பெரும்பாலும் ஒருவர் துஆ ஓத அங்குள்ள ஏனையோர் 'ஆமீன்' என்று கூறுதல் வழக்காறாகும். ஆமீன் என்னும் அறபுச் சொல்லின் கருத்து 'அப்படியே ஆகுக' என்பதாகும். இரு கைகளையும் ஏந்தியவர்களாகவே எல்லோரும் ஆமீன் கூறுவர், இதனையே சீறாப்புராணம் அதன் நகரப்படலத்தில்,

இறைவனைத் தொழு திருகையு மேந்திய வாமின் முறைமு றைப்படிக் கூறிய வோசையு முழங்கும்" (22)

எனக் கொண்டுள்ளது. "வானவ ராமீன் கூற' (பாத்திமா திருமணப் படலம் 167) என்றும் ஆமீ னென்னுஞ்சொலுங் கடல்போ லார்ப்ப' (பாத்திமா திருமணப் படலம் 179) என்றும் 'அந்த ரத்தினி லமரரா மீனொலி யதிர' (பதுறுப்