பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

323


படலம் 116) என்றும் விரைவி னிற்கைகளேந்தியா மீனொலி விளம்ப' (உகுதுப் படலம் 78) என்றும் ஆமீன் என்னும் அறபுச் சொல் உபயோகிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் துஆ ஓதுவதனாலும் அங்கு இருக்கும் ஏனையோர் ஆமீன் கூறுவதனாலும் அங்குள்ளோருக்கு அல்லாஹ் திருவருட்பேறு அளிப்பான் என்ற எண்ணத்துடனே அவ்வாறு செய்யப்படுகிறது. 'பறக்கத்' என்னும் அறபுச் சொல் அல்லாஹ் துஆக் கேட்போருக்கு அளிக்கும் திருவருட்பேற்றி னையே குறிக்கின்றது. திருவருட்பேறு என்னும் கருத்திலேயே திருக்குர் ஆனிலும் இச் சொல் இடம் பெற்றுள்ளது. (7,96) நபிகள் பெருமானாரின் செவிலித் தாயான ஹலீமா (றலி) அம்மையார் பாலூட்டி வளர்ப்பதற்காக அண்ணல் நபி (சல்) அவர்களைக் குழந்தையாகப் பெற்றமையால் ஹலீமா (றலி) அம்மையாரின் உடல் வளர்ச்சியுற்றது. முன்பு குடிக்கத் தாய்ப்பால் இல்லாமல் தவித்த லமுறத் என்னும் குழந்தை நற்பலனடைந்தது. முகம்மது நபி (சல்) அவர்களின் பறக்கத்தினாலேயே இவ்வாறு நிகழ்ந்தது என்கிறார் கவிஞர்.

"வற்றித் தூங்கிய லமுறத்து வெனுமந்த மதலை
நற்ற வம்பெறு முகம்மது நபிபறக் கத்தா
லுற்ற பால்குடித் துடறழைத் துறுபிடி யாகி
வெற்றி வெங்காயக் கன்றெனக் கவின் விளங்கியதே." [1]

முகம்மது நபி (சல்) அவர்களின் திருவருளினால் என்ற கருத்துத் தொனிக்க முகம்மதின் பறக்கத்தால் என்று நதி கடந்த படலத்திலும் (31) மதீனத்தார் ஈமான் கொண்ட படலத்திலும் (60), 'நன்னபி பறக்கத்தாலே நலிகின னிறை யோன்' என்று உகுதுப் படலத்திலும் (176), 'வாய்மை நீதி நற்பறக் கத்தினால்' என்றும் 'மன்னு மாநபி தம்பறக் கத்தி


  1. 1. சீறா அலிமா முலையூட்டுப் படலம் 5