பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

325


உத்துபா என்பவன் அண்ணல் நபி (சல்) அவர்களிடம் வந்து அவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டான். எம்பெருமானார் (சல்) அவர்களும் உரிய முறையில் தக்க பதிலளித்தார்கள். அவர்களின் ஒரு பதிலை இவ்வாறு ஒரு செய்யுளின் பகுதியில் அமைத்துப் பாடுகிறார் கவிஞர் உமறு.

"ஆதிதனை யுளத்திருத்தி பிசுமிலெனு
முரை திருத்தி யமுத மூறும்
வேதமெனும் புறுக்கானி லொருகுறத்
தெடுத்தோதி........." [1]

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்பதைக் குறிக்க அல்ஹம் துளில்லாஹ் என்போம். இதன் சுருக்கமாக 'அல் ஹம்த்’ என்னும் சொற்றொடரை சீறாப்புராணத்தில் இவ்வாறு அமைத்துள்ளார் கவிஞர் உமறு.

"துண்டத்தி னாவி தோன்றத் தும்மலும் தோன்றிப்பின்பு
விண்டுரை பகரு நாவின் மேவியல் ஹம்தையோதி......” [2]

அறபு மொழியில் கல்பு என்றால் தமிழில் இருதயம் என்பதாகும். இந்தச் சொல் இதே கருத்தில் திருக்குர் ஆனிலே (2.89, 204, 283) இடம்பெற்றுள்ளது. சீறாப் புராணத்தில் கல்பு என்னும் அறபுச் சொல் ஆளப்பட்டுள்ளது. இசுறா என்னும் பண்டிதன் பலவிதமான நூல்களைக் கற்றுத் தேர்நது அவற்றை மனதில் இருத்தியவனாக இருந்தான். இதனையே உமறுப்புலவர்,

"பல்வித நூலிற் றேர்ந்து.........
.................................
கல்பிணி விருத் தி...... .......” [3]

  1. 1. சீறா. உத்துபா வந்த படலம் 13
  2. 2. சீறா. தலைமுறைப் படலம் 9 8.
  3. 3.சீறா. இசுறா காண் படலம் 6