பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

328


"படர்திரைக்கடலி னோதை கடந்தன படையி னோதை புடைபடும் படையி னோதை கடந்தன புரவி யோதை கடுவிசைப் புரவி யோதை கடந்தன கரியி னோதை தடைவரைக் கரியி னோதை கடந்தன சலவாத்தோதை." [1]

என்றும், 'முகம்மதின் சலவாத் தோதி' பதுறுப்படலம் (32) என்றும் 'சலவாத் தார்ப்ப' குதிரிப் படலம் (10) என்றும் கடலென சலவாத் தோத' உகுதுப் படலம் (89) என்றும் விண்ணிடத் தடவி நின்ற மிகுசல வாத்தினோதை' உகுதுப் படலம் (90) என்றும் உபயோகிக்கப்பட்டுள்ளமை யைக் காணலாம். சாந்தி, சமாதானம், அமைதி என்னும் பொருளில் 'சலாமத்’ என்னும் அறபுச் சொல் பயன்படுத்தப்படுகிறது. நபிகள் பெருமானாரின உம்மத்தவர்கள் இஸ்லாம் மார்க்கத்தில் சலாமத்துப் பெறுவார்கள், சாந்தி அடைவார்கள், அமைதியை ஈட்டிக் சொள்வார்கள். சமாதானத்தைப் பெற்றுக் கொள்வார்கள் இதனையே உமறுப்புலவர்,

“........................உம்மத்தி னவராய்ப்
பெருகுந் தீனில்ச லாமத்துப் பெறுவார்க ளென்றே" [2]

என்று குறுப்பிட்டுள்ளார் பாத்திமா (றலி) அவர்களின் திருமணத்துக்காக மதீன மாநகர் அலங்கரிக்கப்பட்ட தென்றும் அதற்காக முறையர்கள் மக்களுக்கு முரசறைவித்தனரென்றும் உமறுப்புலவர் வருணிக்கிறார். அங்ஙனம் முரசரையும் பொழுது நாம் விளம்பரப்படுத்தும் கடமைகளைப் புரிந்து பெறற்கரிய பேற்றினைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றும், அத்தகைய பேறுகளுள் ஒன்று உலகிலேயே வாழ்ந்து சலாமத்-அமைதி பெறுவதாகும் என்றும் இவ்வாறு உமறுப்புலவர் பாடியுள்ளார்.

  1. 1. சீறா பதுறுப் படலம் 28
  2. 2. சீறா. சல்மான் பாரிசுப் படலம் 35