பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

329


"தரையின் மீதுற வாழ்ந்துச லாமத்துப் பெறுமின்",[1]

சலாம் சொல்லுதல் ன்று நாம் சர்வ சாதாரணமாகக் கூறும்பொழுது ஒருவர் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக என ஆசீர்வதிப்பதையே குறிக்கின்றது. சலாம் என்னும் அறபுச் சொல் திருக்குர்ஆனிலே (10:10) வந்துள்ளது. சீறாப்புராணத்திலே இந்த சலாம் என்னும் சொல் சலாம் கூறுதல் என்ற பொருளில் பல செய்யுட்களில் இடம் பெற்றுள்ளது. இச்சொல் "சலாஞ் சாற்றி' (பாந்தள் வசனித்த படலம் 10) 'சலா முரைத்து’ (புலி வசனித்த படலம் 10) என்றும் நன்னெறிக் குரிசிற் கென்றன் சலாமையு நவிலுமென்றார்" (இசுறா காண் படலம் 45) என்றும் "சலாமு மோதினர்' ஊசாவைக் கண்ட படலம் 24) என்றும் 'தக்கநற் பொருளா யுறுசலா முரைக்கும் (நபிப்பட்டம் பெற்ற படலம் 8) என்றும் 'ஈனமில் ஜிபுறயீல்வந் திறைய வன் சலாமுஞ் சொன்னார்' (நபிப்பட்டம் பெற்ற படலம் 17) என்றும் 'அமரர் கோமான் சலாமுன் கூறியபின் (தொழுகை வந்த வரலாற்றுப் படலம் 38) என்றும் உயர் சலாமுரைத்து' (உடும்பு பேசிய படலம் 6) என்றும் 'ஆயிரம் பெயரினான்றல் சலாமென வருளி' மக்கத் துக்கு வந்த படலம் 60) என்றும் 'சலாமென் றோது" (ஹபீபு மக்கத்துக்கு வந்த படலம் 69) என்றும் 'சலாமென' (மதியை அழைப்பித்த படலம் 50) 'சலாமெடுத்துரையெனச் சாற்றி (மதியை அழைப்பித்த படலம் 122) என் றும் 'சலாமெடுத் தோதி' (மதியை அழைப்பித்த படலம் 170) என்றும் 'சலா முரைத்து' (தசைக் கட்டியைப் பெண்ணுருவமைத்த படலம் 3) என்றும் 'தறுகிடா தெவர்க்குங் கேட்பச் சலாமெடுத் துரைத்துக் கூறும்’ (மானுக்குப் பிணை நிறை படலம் 16) என்றும் 'பன்னிய சலாமுங் கூறி'

  1. 1. சீறா பாத்திமா திருமணப் படலம் 78