பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

331


லாஹ்” என்று இரண்டு முறை இரண்டு பக்கத்துக்கும் திரும்பிக் கூறி முடிப்பது மார்க்க வழக்காறாகும். இக்கருத்திலேயே சலாம் என்னுஞ் சொல் 'ஓங்கிய சலாமைக் கொண்டு முடித்தனர்' (தாத்துற்றஹாக்குப் படலம் 25) என இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. சலாம் என்னுஞ் இச்சொல் அடுக்குத் தொடராகவும் 'ஓடினர் சலாஞ் சலாமென்றுரைத்தனர் பலரு மொன்றாய்' (ஒட்டகை பேசிய படலம் 9) எனவும் வந்துள்ளமையைக் காணலாம்.

இம்மை என்னும் பொருளைக் குறிக்க அறபியில் துனியா என்னும் சொல் பயன்பத்தப்படுகிறது. திருக்குர்ஆனிலே (2:36, 114) இச்சொல் இதே கருத்தில் வந்துள்ளது, சீறாப் புராணத்தில் இச்சொல் பெருந்துணியா. (பாத்திமா திருமணப் படலம் 69) என ஆளப்பட்டுள்ளது. புவியிடம் துமா கிறத்தும் (தீனிலை கண்ட படலம் 177) திருக்குர்ஆன் 8:94)

ஹயாத் என்னும் அறபுச் சொல்லுக்கு வாழ்க்கை எனப் பொருள் கூறலாம், திருக்குர்ஆனிலும் (2:85) அதே கருத்தில் இச்சொல் வந்துள்ளது. சீறாப்புராணத்தில் 'முகம்மது தனைஹயாத் துடனே' (உகுதுப் படலம் 251) என இச்சொல் இடம் பெற்றுள்ளது. திருக்குர்ஆனிலே மவ்த் என்னும் அரபுச் சொல் மரணத்தைக் குறிக்கின்றது. 'மவுத் தாக்க வுதவி செவ்வாய்' (உயை வந்த படலம் 88) என்பதிலும் நல்லபிர்க ளெவரேனு மவுத்தான தின்றுளதோ நவில்வீ ரென்றாக' (பனீகுறைலா வதைப் படலம் 53) என்பதிலும் மன்னுமிரு விழியாலன் புடனோக்கிப் பார்க்கவவர் மவுத்தா ரானால் (பனீகுறைலா வதைப் படலம் 54) என்பதிலும் மவ்த் என்னும் அறபுச் சொல் 'மவுத்து' என வந்துள்ளமையைக் காணலாம்.

புதைகுழி அறபு மொழியில் கப்ர் என வழங்கப்படுகிறது திருக்குர்ஆனிலும் (9:34) அவ்வாறே வந்துள்ளது. அபு