பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

332


தாலிப் அவர்களின் மனைவி இறையடி எய்திய நிகழ்ச்சியைக் குறுப்பிடும் பொழுது முஸ்லிம்களின் புதைகுழியைக் குறிக்கும் கப்ர் என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பாத்திமா அம்மையார் நல்லடச்கஞ் செய்யப்பட்டமை 'தன்னி லியா வருந் துன்புறக் கபுறில் வைத் தனரால்' (உசைனார் செய்த படலம் 11) என்றும் 'மருவுலாவிய கபுறில் வைத்திட (உசைனார் பிறந்த படலம் 12) எனறும், கபுறடராமல் (உசைனார் பிறந்த படலம் 15) என்றும் வருணிக்கையில் கப்ர் என்னும் அறபுச்சொல் தமிழில் கபுறு எனப் பயன்படுத்தப்பட்டுள்ளது. விவாக ஒப்பந்தம் அறபியில் 'நிக்காஹ்' என வழங்கப்படுகிறது. சில சமயங்களில் மணவிழாவைக் குறிக்கவும் இப்பதம் பயன்படுத்தப்படுகிறகிறது. நிக்காஹ் என்னும் அறபுச் சொல் திருக்குர்ஆனிலே பல இடங்களில் (2:235: 237; 4:6 24:60) வந்துள்ளது. அலி (றலி) அவர்களினதும் பாத்திமா (றலி) அவர்களினதும் திருமணத்தைக் குறிப்பிட நிக்காஹ் என்னும் இந்த அறபுப் பதத்தினை உமறுப்புலவர் உபயோகித்துள்ளார். அலி (றலி) அவர்களுக்கும் பாத்திமா (றலி) அவர்களுக்கும் நிக்காஹ் நிறைவேற்றப் பட்டது என்னும், இறைவன் கட்டளையை அமரர் கோமான் ஜிபுறீல் (அலை) அவர்கள் அண்ணல் நபி (சல்) அவர்களுக்குக் கொண்டு வந்தார்கள் என்பதனை உமறுப்புலவர் இவ்வாறு வருணிக்கிறார்!

"பொன்னகர் விளக்கிப் பின்னர் புகழ்தர மகருநாட்டி
பென்னுட னிசுரு பீல்மீக் காயிலுஞ் சாட்சியேயப்
பன்னரு மலியார்க் கிபைப் பாத்திமா தமைநிக்காகு
முன்னிய தருத்து பாவின் முடிந்தன னிறைவனனறே." [1]

இதனையே மற்றொரு செய்யுளில்,

  1. 1. சீறா. பாத்திமா திருமணப் படலம் 23