பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

333


"மதர மென கணிக்குஞ் சீர்த்தி வாளவி தமக்கு மேன்மை
முதலவன் மணநிக காகு முடித்தனன் ......" [1]

என்றும் பிறிதொரு செய்யுளில்,

"கலிக்கு மாமறை முதவனிக் காகினைக் கருதி
யலிக்கும் பாவைக்கு முடித்திட வகுமது மகிழ."[2]

என்றும் வருணிக்கிறார் கவிஞர் உமறு தமது சீறாப்புராணத்தில். அண்ணல் நபி (சல்) அவர்களுக்கும் செயினப் (றலி) அம்மையாருக்கும் நிக்காஹ் நிறைவேற்றப்பட்டமையை விண்ணவர் தலைவர் ஜிபுறீல் (அலை) அவர்கள் அறிவித்ததை உமறுப்புலவர் இவ்வாறு விவரிக்கிறார்!

"செயினபு நங்கை யார்க்குஞ் செம்மலே யுமக்கும் நிச்கா
குயர்நிலை தனிற்செய் தானென் றுரைத்தனர் ஜிபுறயீலும்."[3]

முஸ்லிம்களின் விவாக ஒப்பந்தத்தில் முக்கிய அமிசமாக விளங்குவது 'மகர்' என்னும் பணக் கொடுப்பளவு ஆகும். ஒரு கணவன் தனது மனைவிக்குச் செலுத்த வேண்டிய கட்டாயப் பணக் கொடுப்பனவாகத் திருக்குர் ஆன் (2:229) மகரை விதிக்கிறது. இதனை 'மணமகள் பணம்’ என்றும் கூறுவர். மனைவிக்குரிய நன்மதிப்பைக் கண்ணியப்படுத்தும் முறைமையாகவும் இந்த மகர்க் கொடுப்பளவு அமையும் என்பர். ஒரு முஸ்லிம் மனைவிக்கு அவர்தம் கணவனிடமிருந்து மகர் கோரும் உரிமை இருக்கின்றது. இவ்வாறு ஹவ்வா (அலை) அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம் மகர் கோரியமையும் அது செலுத்தப்பட்ட

  1. 1. சீறா. பாத்திமா திருமணப் படலம் 65
  2. 2. சீறா. பாத்திமா திருமணப் படலம் 111
  3. 3. சீறா செயினபு நாச்சியார் கலியாணப் படலம் 12