பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

334


மையும் தலைமுறைப் படலத்திலே 21, 22, 23) குறிபபிடப்பட்டுள்ளது. அண்ணல் நபி (சல்) அவர்கள் கதீஜா (றலி) அவர்களைத் திருமணம் புரியும்போது கொடுக்கப்பட்ட மகர் ஐந்நூறு வெள்ளிக் காசுகள் என்று உமறுப்புலவர் ஒரு செய்யுளில் இவ்வாறு குறிப்பிடுகிறார்!

"இருகிளை யவருஞ் சம்மதித் தைந்நூ றிரசித மகரெனப் பொருந்திக் கருமுகிற் கவிகை முகம்மது தமக்குங் காரிகை கனங்குலை தமக்கு மருமலர்த் தொடையல் புனையுநிக் காகை சணத்துடன் முடித்திடு மென்னப் பெருகிய ஹாஷிம் குலத்தவ ரனைத்தும் பிரியமுற் றுரைத்தன ரன்றே."1

மகர் என்னும் அறபுச் சொல் 'புகழ்தர மகரு நாட்டி' (பாத்திமா.திருமணப் படலம் 82) என்றும்

"அகலிடம விளங்கு மைந்நூ றிரசிதத் தரிய காசு மகரென வலிக்க னாதி வதுவையை முடித்தா னென்னல்."2

என்றும், மகரிர சிதமைந் நூறென்று பாத்திமா திருமணப் படலம் 49) என்றும் 'மகரை கேட்டு வருக (பாத்திமா திருமணப் படலம் 49) என்றும் 'உறுதிநன் மகர்பெற்ற றேனென்று' (பாத்திமா திருமணப் படலம் 51) 'மன்னிய வதுவைக் கானமகரென' (பாத்திமா திருமணப்படலம் 58) என்றும் அமைந்துள்ளது.

விவாக ஒப்பந்தம் பற்றிய இஸ்லாமிய சட்டத்திலே உபயோகிக்கப்படும் ஒரு பதம் கபூல் என்பது. விவாக ஒப்

1. சீறா, மணம்புரி படலம் 113 2. சீறா. பாத்திமா திருமணப் படலம் 43