பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

336


"நீதியே யெனவும் பலதரந் தவுபா நிகழ்த்தியும்...
சோதியே தவுபாத் தனைக்கபூ லாக்கொன்று..."[1]

என ஒரு செய்யுளிலும்

"இறைவனு மாதஞ் செயுந்தவு பாவுக் கிசைந்தினி துறக்கபூ லாக்க
.........................
மறுமதி யகடு தொடுமுடி யறபா மலையினி லிருவருஞ்சேர்ந்தார்." [2]

என மற்றொரு செய்யுளிலும் அமைந்துள்ளன. தெரிதரத் தவுபாச் செய்தால் தீவினை மறப்பேன்’ (கபுகாபுப் படலம் 49) என்பதிலும் 'காத லாந்தவு பாக்லபூ லாயது' (பனீ குறைலா வதைப் படலம்) என்பதிலும் தவுபா என்னும் அறபுச் சொல் இடம் பெற்றுள்ளமையைக் காணலாம்.

அல்லாஹ்வின் பாதையில் என்பது பீஸ்பீலில்லாஹ் எனப்படும் திருக்குர்ஆனிலும் (2:154) இந்தச் சொல் இடம் பெற்றுள்ளது அல்லாஹ்வின் பாதையில் என்பது சுருக்கமாக பீஸபீல் என்று தீனிலை கண்ட படலத்திலும் (19) ஈமான் கொண்டவர்கள் ஹபஷா ராச்சியத்துக்குப் போந்த படலத்திலும் (3) வத்தான் படைப் படலத்திலும் 9,(47) உகுதுப் படலத்திலும் (116, 167) உயை வந்த படலத்திலும் (82) பனிகுறைலா வதைப் படலத்திலும் (3) இடம் பெற்றுள்ளது.

கவுல் என்பது மற்றொரு அரபுச் சொல். இது ஒரு கூற்று என்றும் ஒரு வாக்குறுதி என்றும்' ஓர் ஒப்பந்தம் என்றும் பொருள் தரும் (திருக்குர்ஆனிலே 4: 5, 8, 9, 148) இந்த அறபுச் சொல் இக்கருத்துக்களிலே பல தடவைகள் வருகின்றது. அண்ணல் நபி (சல்) அவர்கள் மதீனாவிலிருந்து உம்றாச் செய்ய போன பொழுது ஹாதைபியா என்னும

  1. 1. சீறா. தலைமுறைப் படலம் 34
  2. 2. சீறா. தலைமுறைப் படலம் 35