பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

337

தலத்தில் பெருமானார் (சல்) அவர்களுக்கும் மக்கா குறைஷிக் காபிர்களுக்கும் இடையே ஒர் ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த உடன்படிக்கையைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது உமறுப்புலவர் உடன்படிக்கையைச் சுட்ட 'கவுல்' என்னும் அரபுச் சொல்லையே இவ்வாறு உபயோகித்துள்ளார்.

"சொல்லிய விறையா மல்லா தூதரா முகம்ம தென்னுங்
கல்விசீ ருடைய வள்ளல் கவுல்கொடுத் திட்ட வாறென்
றொல்லையி லெழுது மென்ன வுரைத்தனர்..." [1]

இவ்வாறு எழுத மறுத்ததும் அது திருப்பி எழுதப்பட்ட மையை இவ்வாறு விவரித்துள்ளார்.

"அரிதோர் புகழ்சேர் வண்மை யப்துல்லா முகம்ம தெனபோர்
பரிவொடு கவுல்தர மீந்த படியுமு றாச்செய் தேக
வரிசையாய் மக்கத் துள்ளோர் வழிவிடக் கடவ தென்றுங்
தெரிவுறத் தீட்டு கென்றார்..." [2]

மற்றொரு பாடலில் மக்காக் காபிர்களும் மதீனத்து முனாபிக்குகளும் ஒப்பந்தம் செய்து கொண்டமை 'திக்கறிய வேகவுல் கொடுத்தனர் திறந்தோர்' (சுகுறாப் படலம் 12) என வந்துள்ளது. இந்த கவுல் என்னும் அரபுச் சொல் முஸ்லிம் மக்களின் தமிழ்ப்பேச்சு வழக்கில் அவ்வளவாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்பதும் ஈண்டு நோக்கற் பாலது.

சீறாப்புராணத்தில் இடம் பெற்றுள்ள ஏனைய அறபுச் சொற்களை இனி ஒவ்வொன்றாக எடுத்துக் கொள்வோம். அவை எவ்வாறு ஒவ்வொரு படலத்திலும் அமைந்துள்ளது என்பதனைச் சுருக்கமாக ஆராய்வோம்.

  1. 1.சீறா. உமுறாவுக்குப் போன படலம் 81, 83
  2. 2. சீறா. உமுறாவுக்குப் போன படலம் 81, 83

22