பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29


காட்ட அவையடக்கம் பயன்படும். உமறுப்புலவர் இப்பணியை எவ்வளவு சிறப்பாக செய்கிறார் பாருங்கள்.

கடல்களும் மலைகளும் நிலைபெயர்ந்து விடுமோ என்று அஞ்சுமளவுக்கு சண்டமாருதம் வீசுகிறது. அந்தச் சண்ட மாருதத்தின் பேரொலிக்கும் வேகத்தும் முன்னே மூச்சுவிடுகிறது ஒரு சிற்றெறும்பு அதுதான் என்னுடைய இச்சிறு முயற்சி என்று பணிவாகக் கூறிக் கொள்கிறார் உமறுப் புலவர்.

படித்தலத் தெழு கடல் குல கிரிநிலை பதற
வெடித்து வீசிய சண்டமா ருதத்தினுக் கெதிரே
மிடித்து தொத்தசிற் றெறும்பொரு மூச்சுவிட்டதுபோல்
வடித்த செத்தமிழ்ப் புலவர் முன் யான் சொல்லுமாறே,"[1]

வயற்காடுகளில் பசுமையான நாற்றுகள் நெருங்கி வளர்ந்திருப்பதைக் கண்ட கவிஞருக்கு, 'செழுங்கிளை தாங்கும் உத்தமர்கள்' செல்வம் சேர்த்து தம் உற்றார் உறவினரை ஒன்று சேர்த்து இனிது வாழும் ஒரு குடும்பத் தலைவனை நினைவுறுத்துகிறது.

"அருமறை நெறியும்,
வணக்கமும் கொடையும்,
அன்பும் ஆதரவும் நல்லறிவும்
தருமமும் பொறையும்
இரக்கமும் குணமும்
தயவும் சீர் ஒழுக்கமும் உடையோர்
பெருகியச் செல்வக் குடியொடு கிளையும்
பெருத்து, இனிது இருந்து வாழ்வனபோல்
மருமலர் பழனக் காடெல்லா நெருங்கி
வளர்ந்தது நெட்டிலை நாற்றே. "[2]

உளமார் வர்ணனைகளெல்லாம் நபிகள் பெருமானார்


  1. 1. சீறா. கடவுள் வாழ்த்து 19
  2. 2. சீறா நாட்டுப்படலம் 28