பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

347


புலவர் தமது சீறாப்புராணத்தில் வருணித்துள்ளார். அல்லாஹ்வின் சிறப்பியல்புகளைத் தமிழில் வருணித்துள்ள அதே வேளையில் அல்லாஹ் என்னும் சொல்லையும் பொருத்தமான முறையில் பயன்படுததி உள்ளார். சில சமயங்களில் அல்லாஹ்வின் திருத்தூதர் என்பதனை விளக்குமுகமாக "நெடி யவ னிறசூ லுல்லா (மானுக்குப் பிணை நின்ற படலம் 12) என்றும் 'நான வாச (மெய்யப்பாடு மிறகு லுல்லா விரும்பி நீராடு முன்னர்' கவுலத்தை விட்டுக் கூடின படலம் 11), என்றும் வந்துள்ளது. ஏனைய சந்தர்ப்பங்களில் அல்லாஹ்வின் தனித்தன்மையை விளக்கவே அல்லாஹ் என்னும் சொல் ஆளப்பட்டுள்ளது. அத்தன்மையான சந்தர்ப்பங்கள் வருமாறு:

"அல்லறச் சிறந்தவரி யல்லாவென் றொருபெயரின்ன." [1]

"அழகிய தெவையுமல் லாவுக் காகவே
விழைவுடன் கொடுத்திட வேண்டும்........" [2]

"இல்லல் லாவையும் ஹபீபையு முளத்தினிலிருத்தி." [3]

"பொல்லாத வஞ்சகரைத் தெளியாத
   மனத்தவரை புன்மை யோரைக்
கல்லாத கயவரெனுங் குபிரவரை
   வேகமறக் களைந்து நாளு
மெல்லாருந் தொழுமரிய தீனைவளர்த்
   துறுசீய மெற்கீந் தாள் வாய்
அல்லாவே அல்லாவே யென்றிரங்கிப்
   புகழ்ந்து புகழந் தறைந்தார் மன்னோ." [4]

  1. 1. சீறா. ஒப்பெழுதித் தீர்த்த படலம் 38
  2. 2. சீறா. பாத்திமா திருமணப் படலம் 206
  3. 3. சீறா உகுதுப்படலம் 241
  4. 4.சீறா. உயை வந்த படலம் 93