பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

349


"சொல்லிய விறையா மல்லா தூதரா முகம்மதென்றும்." [1]

இனி, சீறாப்புராணத்தில் சிறப்பாக அமைந்துள்ள பாரசீக மொழியிலிருந்து பெறப்பட்ட சொற்களை எடுத்துக் கொள்வோம். தமிழ்ப் பேசும் முஸ்லிம் அல்லாஹ்வை அச்சொல்லைப் பயன்படுத்தாத சந்தர்ப்பங்களில் ஆண்டவன் இறைவன், நாயகன் முதலிய பல சொற்களை உபயோகிப்பர். அவ்வாறே பாரசீக மொழியில் கடவுளை 'குதா' என்று குறிப்பிடப்படுகிறது. எல்லாம் வல்ல இறைவன் என்னும் பொருளில் பாரசீக மொழியில் 'குதை' என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது. பரம்பொருள், சுயம்புவானவன் என்னும் பொருள்களும் தருவதாக இந்த குதா என்னும் பாரசீகச் சொல் அமைந்துள்ளது. உருது மொழியிலும் இந்தச் சொல் இதே கருத்தில் உபயோகிக்கப்படுகிறது. அறபு மொழியில் அல்லாஹ் பாரசீக, உருது மொழிகளில் குதாவாகும் உமறுப்புலவரும் அல்லாஹ்வைக் குறிக்க குதா என்னும் இந்த உபயோகத்தையே தமது சீறாப் புராணத்தில் மேற்கொள்கிறார். சாதாரணமாக நாம் தும்மும் பொழுது பக்கத்திலிருப்பவர்கள் அதற்குப் பதில் சொல்லுவது போல் அல்ஹம்துலில்லா என்று கூறுதல் வேண்டும். முதன் முதலில் ஆதம் (அலை) அவர்களைப் படைத்து உயிர் ஊட்டப்பட்ட பொழுது அவர்கள் தும்மினார்கள் குதாவாகிய அல்லாஹ் பதில் சொன்னதாக அமைத்து உமறுப்புலவர் இவ்வாறு பாடியுள்ளார்.

"துண்டத்தி னாவி தோன்றத் தும்மலுந் தோன்றிப் பின்பு விண்டுரை பகரு நாவின் மேவியல் ஹம்தை யோதிக்

  1. 1 சீறா தலைமுறைப் படலம் 9