பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

351

கோதர மனமும் வாக்குமொன் றாகிக்
குதாதனை யடிக்கடி புகழ்ந்தார்."[1]

குதா என்னும் பாரசீக சொல்,

“குதாதனை வருளினால்............”[2]

என்றும்,

“குதாதனை வணங்கி யேந்தி”[3]

என்றும்,

“.........வேறு படைக்கலங் காண்கி லார்கைக்
கொண்டன ரீத்தம் பாளை யீர்க்கினை குதா தன்றூதர்”[4]

என்றும் வந்துள்ளமையைக் காணலாம்.

பாரசீக மொழியிலிருந்து தமிழுக்கு வந்துள்ள ஒரு சொல் தமிழில் ‘பருமான்’ எனப் பயன்படுகிறது. இச்சொல் கட்டளை என்னும் இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய காப்பியங்களிலே பருமான் என்னும் சொல் தெய்வீகக் கட்டளையைக் குறிப்பிடவே ஆளப்பட்டுள்ளது. ஆங்கில மொழியிலுள்ள (FIRMAN) பெர்மன் என்னும் சொல் பாரசீக மொழியிலிருந்தே பெறப்பட்டுள்ளது. சீறாப்புராணத்தில் உள்ள பருமான் என்னும் பாரசீகச் சொல்லும் அல்லாஹ் தஆலாவிடமிருந்து ஜிப்றயீல் (அலை) அவர்கள் அண்ணல் நபி (சல்) அவர்களுக்கு கொண்டு வந்த கட்டளைகளையே குறிப்பிடுகின்றது. நபிகள் நாயகம் (சல்) அவர்களுக்கு நபிப்பட்டம் வழங்கப்பட்டமையையே உமறுப்புலவர் இவ்வாறு வருணிக்க ஆரம்பிக்கிறார்.

  1. சீறா. மதியை அழைப்பித்த படலம் 157
  2. சீறா. மதியை அழைப்பித்த படலம் 157
  3. சீறா. மதீனத்தார் ஈமான் கொண்ட 18
  4. சீறா. உகுதுப் படலம் 190