பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

352

“சோதியா யெவைக்கு முள்ளுறைப் பொருளாய்த்
தோற்றமு மாற்றமுந் தோன்றா
வாதிதன் பருமான் கொண்டினி தோங்கி
யமரிழிந் தமரக் கரசன்
மேதினி புகுந்து முகம்மது தமக்கு
விளங்கிய நபியெனும் பட்டங்
கோதறக் கொடுப்பத் தீன்பயிர் விளைத்த
கூறெலாம் விரித்தெடுத் துரைப்பாம்”[1]

நபிகள் பெருமான் (சல்) அவர்களுக்கு முதன் முதலில் திருக்குர்ஆன் அருளப்பட்டதிலிருந்து இஸ்லாம் இரகசியமாகவே போதிக்கப்பட்டு வந்தது. பகிங்கரமாக அனைவருக்கும் இஸ்லாத்தைப் போதிக்குமாறு இட்ட அல்லாஹ்வின் கட்டளையை அமரர் கோமான் ஜிபுரயீல் (அலை) அவர்கள் அண்ணல் நபி (சல்) அவர்களுக்கு அறிவித்தமையை உமறுப் புலவர் இவ்வாறு வருணிக்கிறார்:

"சீதவென் கவிகை நீழ றிருந்திய குரிசி லானோர்
தூதென நபியின் பட்டந் துலங்கிய நான்கா மாண்டில்
வேதம்நல் வணக்க மியார்க்கும் விரித்துற விளக்குமென்ன
வாதிதன் பருமான் மேற்கொண் டமரர்கோனுரைத்துப் போனார்."[2]

மற்றொரு சந்தப்பத்திலும் இவ்வாறே அமைந்துள்ளது. ஜிபுரயீல் (அலை) அவர்கள் இறைவனின் கட்டளையைக் கொண்டு ஒரு நொடிப் பொழுதில் வந்தார்கள். வந்ததும் முகம்மது நபி (சல்) அவர்கள் அளவிலா

  1. சீறா. நபிப்பட்டம் பெற்ற படலம் 1
  2. சீறா. தீனிலை கண்ட படலம் 1